Friday 3 August 2012

நேரமில்லை என்றிவன் இருக்கவில்லை

காதலியின் கண்கள் அனுப்பும்
குறுந்தகவல்களின்
குறிமுறைகளைய
காதலனுக்கு நேரமில்லை

கட்டிய மனைவி
கட்டிட ஆடை வாங்க
கடைத் தெரு செல்லக்
கணவனுக்கு நேரமில்லை

பிள்ளையின் வீட்டுப் பாடத்திற்கு 

உதவிப் பிள்ளையின்
அறிவு வளர்த்திடப்
பெற்றோர்க்கு நேரமில்லை

மூலையில் சிவனே என்றிருக்கும்
முதியவர்களிடம் பேச்சுக் கொடுக்க

இந்தக் காலத்து
இளையவர்க்கு நேரமில்லை

எழுத நேரமில்லை என்று 

அன்று இருந்திருந்தால்
ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் 

எமக்கில்லை இன்று

அப்பிள் ஏன்விழுந்தது 

என்று யோசிக்க நேரமில்லை 
என்று அன்று இருந்திருந்தால்
புவியீர்ப்பு விசை நாமறிந்திருப்போமா


இனக்கொலையாளிகளும்
நேரமில்லை என்றிருப்பதில்லை
தொடர்கின்றனர் ஓயாத கொலைகளை

 காட்டிக் கொடுக்கும் கயவர்களும்
நேரமில்லை என்றிருப்பதில்லை
ஓயாமல் தொடர்கின்றன துரோகங்கள்

இந்தியத் துதிபாடிகளும்
நேரமில்லை என்றிருப்பதில்லை
வல்லரசை அனுசரித்துப் போகவேண்டும்
எனும் பல்லவி பாட மறப்பதில்லை

ஒலிம்பிக் ஒளிபரப்புப் பார்க்க வேண்டும்
நேரமில்லை எனக்கு என
கோபி சிவந்தன் இருக்கவில்லை
ஈரமில்லா உலக நெஞ்சகத்தின்
வஞ்சகம் வெளிப்பட

உணவு மறுத்துத் தன்னூண் வருத்திப்
போராடுகிறான் பலநாளாய்

நேரமில்லை எமக்கென இருக்காமல்
தாயக விடுதலை
பங்களிப்போம் என்னாளும்

Thursday 2 August 2012

மின் வெட்டு: முன்னாள் வருங்கால வல்லரசு இந்தியா.

அறுபத்திரண்டு கோடி மக்களுக்கு மின்வெட்டு. நாட்டின் அரைவாசிப்பகுதியில் அனர்த்தம். போக்குவரத்துத் தடை. அவசர சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் தவிப்பு. சமிக்ஞை விளக்குகள் செயற்படாமல் போக்குவரத்து நெரிசல். தண்ணீர் வழங்கலின்றி மக்கள் தவிப்பு. சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்கத்துள் சிக்குண்டு பரிதவிப்பு. அவசர அலுவலாக வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் நடுத்தெருவில் தலையில் கைவைப்பு.  தொடரூந்தில் தீ. பூனேயில் குண்டு வெடிப்பு. இந்தியா ஒளிர்கிறது.


Incredible India or Intolerable India
பொருளாதாரம் வளரும் போது சக்தி தேவையும் அதிகரிக்கும். அதற்கு ஏற்ப சகதி வழங்கலை அதிகரிக்க வேண்டும். சக்தி வழங்கல் துறையில் முதலீடு செய்ய வேண்டும். செய்யத் தவறியது யார் குற்றம்? திட்ட ஆணைக்குழு என்று ஒன்று இந்தியாவில் இருக்கிறது அது செயற்படுகிறதா? இந்த ஆண்டு மழைவீழ்ச்சி குறைந்த அளவில் இருந்ததால் நீர் மின் உற்பத்தி குறையும் என்றும் விவசாயிகள் நீரை இறைக்க அதிக மின்சாரம் பாவிப்பார்கள் என்பதையும் அது எதிர்பார்த்திருக்கவில்லையா?

காரணம் தெரியவில்லையாம்
உலகத்தில் என்றுமே நடந்திராத பாரிய மின் வெட்டு இந்தியாவில் நடந்துள்ளது. உலக மக்கள் தொகையில் 10%மானோர் இந்த மின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட பெரிய ஒரு நிகழ்விற்கான காரணம் தெரியவில்லை. வழமை போல் இதைக் கண்டறிய ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் தங்களது மின் பிறப்பாக்கிகளைக் கொண்டு செயற்பட்டன. ஆனால் மருத்துவ மனைகள் பல பாதிக்கப்பட்டன. அவற்றின் மின்பிறப்பாக்கிகளுக்கு எரிபொருள் இருக்கவில்லையாம். மின் தட்டுப்பாட்டால் எரிபொருள் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. சில அரசியல்வாதிகள் உதரப் பிரதேசம், ஹரியான, பஞ்சாப் போன்ற மாநில அரசுகள் தமக்கு ஒதுக்கப்பட்ட அளவிலும் அதிக மின்சாரத்தைப் பெறுகின்றன என்று குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் ஹரியான அரசு இதை மறுத்துள்ளது. மாநில அரசு அதிகம் மின்சாரம் பெறாமல் தடுக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்கிறது அது. சுற்றுச் சூழல் ஆர்வலரும் செயற்பாட்டாளருமாகிய சைலேந்திர தஷ்வந்த் சக்திப் பிறப்பாக்கும் அதிகாரம் மத்தியில் அளவிற்கு அதிகாமாகக் குவிந்து விட்டது அதை மாநில அரசுகளுக்கு பரவலாக்கம் செய்ய வேண்டும் என்கிறார்.

கேலிக்கூத்தான மக்களாட்சி
நாட்டை நன்கு நிர்வகிக்கக்கூடியவர்களை ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்காமல் இலவசங்களை வழங்குபவர்களை இந்திய மக்களாட்சி முறைமை தேர்தெடுக்கிறது. அரசியல் கட்சிக்குள் மக்களாட்சி முறைமை இல்லை. குடும்ப ஆட்சி முறைமையே நிலவுகிறது. இலவசமாக மின்சாரம் வழங்குவதாக வாக்குறுதி வழங்கியவர்களுக்கு விவசாயிகள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்தனர். பின்னர் தமக்குக் கிடைக்கும் மின்சாரத்தை மற்றவர்களுக்கு கள்ளத்தனமாக விற்பனை செய்கின்றனர். இதனால் மின்சாரம் வழங்கும் அரச நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன. மின்சாரத்தேவையை சரியாகக் கணக்கிட முடியாமல் இருக்கிறது. ஜுலை 30-ம் திகதி உத்தரப்பிரதேசத்தில் 900மெகா வாட் மின்சாரம் வழமையிலும் அதிகமாக பெறப்பட்டுள்ளது. உற்பத்திச் செலவிற்கு ஏற்ப மின்சார விலையை அதிகரித்தால் வாக்காளர்கள் ஆத்திரப்படுவார்கள் என்று விலை அதிகரிக்கப்படுவதில்லை. மின்சார உற்பத்தித் துறையில் அரசுடமையாக இருப்பதால் அங்கு திறமையான வள முகாமைத்துவம் இல்லை.


இரு அதிகார மையங்கள்
இந்தியாவின் ஆட்சி அதிகார மையங்கள் இரண்டாகும். ஒன்று பிரதம மந்திரி தலைமையிலான மந்திரிசபை மற்றது சோனியா காந்தி குடும்பத்திடமும் அவரது ஆலோசகர்கள். முதலாவது இரண்டாவது அதிகார மையத்திற்கும் வாக்கு வங்கிக்கும் பயப்படுகிறது. இரண்டாவது வாரிசு அரசியலை எப்படித் தக்க வைப்பது என்பதிலும் தமக்கு ஆதரவு கொடுக்கும் பெரு முதலாளிகளைத் திருப்திப்படுத்துவதிலும் முழுக்கவனத்தையும் செலுத்துகிறது. இந்திய அரச் நிர்வாகக் கட்டமைப்பு இந்த இரு அதிகார மையங்களையும் திருப்திப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. உலகிலேயே அதிக படித்த அரசுத் தலைவர் மன்மோகன் சிங். உலகிலேயே திறமையான நிதி அமைச்சர் இதுவரை பதவியில் இருந்த பிரணாப் முஹர்ஜீ. இப்படி இருந்தும் இந்தியப் பொருளாதாரம் ஏன் சிக்கலில் இருக்கிறது. வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பைப் பொறுத்தவரை சீனா முதலாவது இடத்திலும் இந்தியா 150வது இடத்திற்குக் கீழும் இருப்பது ஏன்? போதாக் குறைக்கு சகல மட்டங்களிலும் ஊழல். இப்போது சகலரினதும் கவனம் 2014 தேர்தல் பற்றியதே. ஒரு மாநிலம் அதிக மின்சாரம் பெறும் போது அதைக் கட்டுப்படுத்த இந்திய மின்கட்டமைப்பிடம் சிறந்த circuit breakers இருக்கின்றன ஆனால் அவற்றை அரசியல்வாதிகளுக்குச் சார்பான அதிகாரிகள் செய்றப்பட விடுவதில்லை என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த பிராந்தியத்திற்கு மின்சாரம் தடைபட்டால் அது சிலரின் தேர்தல் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என்பதற்காக அதிக மின்சாரம் பெறுவதை circuit breakersமூலம் தடுக்காமல் செய்து விருகின்றனர். மத்தியிலும் மாநிலத்திலும் அதிக மின்சாரம் பெறுவதைத் தடுக்கக் கூடிய வசதிகள் இருந்தும் அரசியல் காரங்களுக்காக தடுக்காமல் விட்டதால்தான் இந்த அனர்த்தம் நிகழ்ந்தது என்கிறார் முன்னாள் மின்சாரத்துறை அதிகாரியான சுரேந்திர ராவ். ஆனால் அதிக மின்பெறுதல் மட்டும் மின் தட்டுப்பாட்டுக்குக் காரணமல்ல.

பொருளாதாரத்தைப் பாதிக்கும்
வழமையான நிலையிலேயே இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் மின்சார விநியோகம் இன்றியே இதுவரை தங்கள் வாழ் நாட்களைக் கழித்து வருகிறார்கள். இவர்கள் மின்சாரம்ப் பாவனையாளர்களாக மாறினால் என்ன நடக்கும்? இந்த வாரம் செய்யப்பட்ட மின் வெட்டால் இந்தியப் பொருளாதாரத்திற்கு பல ஆயிரங் கோடி ரூபாக்கள் நட்டம் ஏற்ப்பட்டுள்ளது என இந்திய கைத்தொழில் பேரவை அறிவித்துள்ளது. மின்சார உற்பத்தியில் பல மாற்றங்கள் தேவை என அது வலியுறுத்தியுள்ளது. மின்சாரத் தட்டுப்பாட்டிற்கு உடனடித் தீர்வு இல்லை என அமைச்சர் வீரப்ப மௌலி தெரிவித்துள்ளார். இந்தியாவின் முக்கிய் பொருளாதார மையங்களான மும்பாயும் பெங்களூருவும் பாதிக்கப்படாதது ஒரு நிம்மதியான செய்தியாகும். சரியான முதலீடு இல்லாமையால் பலகாலமாகச் செயற்பட்டுவரும் பழைய மின்பிறப்பாக்கித் தொகுதிகளை மாற்றீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரத் தட்டுப்பாடு உலக ரீதியில் இந்தியப்பொருளாதாரத்தின் போட்டியிடு திறனை ஏற்கனவே குறைத்துள்ளது. மின்சார நெருக்கடி வெளிநாட்டு முதலீடுகளைப் பாதிக்கும்.ஏற்கனவே கண்டபடிக் கூடிக் குறையும் voltageஆல் பல தொழிற்சாலைகள் பாதிப்புக்களையும் நட்டங்களையும் அடைந்துள்ளன.பல அரச அதிகாரிகள்
மெழுகு திரியோளியில் சிகை அலங்காரம்

வல்லரசுக் கனவு பலிக்குமா?
மின்சார உற்பத்தியில் உ:ள்ள குறைபாடுகளான திட்டமிடல் திறமையின்மை, நிர்வாகச் சீர்கேடு, ஊழல், அரசினால் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாமை போன்றவை மின்சார உறப்த்தித் துறைக்கு மட்டுமல்ல இந்தியாவின் சகல துறைக்களுக்கும் பொதுவானவை. இந்திய உணவு உறபத்தியில் 30%மானது மக்களைச் சென்றடையமுன்னர் பழுதடைந்து விடுகிறது. விநியோகச் சீர் கேடு தகுந்த வைப்பிடல் இல்லமை போன்றவையே இதற்குக் காரணம். ஊழலால் இந்திய திறைசேரிக்கு பல பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இழப்பு ஏற்படுகிறது. இனத் சீர்கேடுகளைச் திருத்க் கூடிய தலைமை இலகுவிலோ அல்லது விரைவாகவோ இந்தியாவிற்குக் கிடைக்கும் சாத்தியங்கள் இல்லை. வருங்கால பெரு வல்லரசாகக் கருதப்படும் இந்தியா சரியான தலைமை கிடைக்காவிடில் முன்னாள் வருங்கால வல்லரசாக மாறிவிடும்.

Wednesday 1 August 2012

சைட் அடித்தல் பற்றி விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகள்

ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர். அவர்களின் முடிவு European Journal of Social Psychology என்னும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது. Sarah Gervais என்னும் மனோதத்துவவியலாளர் University of Nebraska, Lincoln இல் செய்த ஆய்வுகளையே இந்த சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

பார்ப்பவரில் வித்தியாசம் இல்லை பார்க்கப்படுபவர்தான் முக்கியம்
சைட் அடிப்பவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சைட் அடிப்பது ஒரு மாதிரியாகத் தான் இருக்கும். சைட் அடிக்கப்படுபவர் ஆணா பெண்ணா என்பதில் தான் சைட் அடித்தல் தங்கி இருக்கிறது. இதனால் சைட் அடித்தல் இருவகையாக இனம் காணப்பட்டுள்ளது.

முழுமையான சைட் அடித்தலும் பகுதிகளாக சைட் அடித்தலும்
பெண்களும் சரி ஆண்களும் சரி ஆண்களைச் சைட் அடிக்கும் போது முழுமையாகச் சைட் அடிக்கிறார்கள். பெண்களும் சரி ஆண்களும் சரி பெண்களைச் சைட் அடிக்கும் போது பகுதிபகுதியாக சைட் அடிக்கிறார்கள். பெண்களைச் சைட் அடிக்கும் போது எமது மூளை அவர்களின் உருவத்தை பகுதி பகுதியாக ஆய்வு செய்கிறது.


சைட் அடித்தல் பரிசோதனை
சைட் அடித்தல் பற்றிய ஆய்வு Local processing and Global processing என்னும் இரண்டு அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. 227 பல்கலைக்கழக மாணவர்களிடம் முதலில் ஒரு ஆண் அல்லது பெண்ணின் படத்தை காட்டப்பட்டது. பின்னர் இரு படங்கள் காட்டப்படும் அதில் ஒன்று ஏற்கனவே காட்டப்பட்ட படமாகவும் மற்றது அதில் சிறு மாறுதல் செய்யப்பட்ட படமாகவும் இருக்கும். மாணவர்கள் அவற்றில் எது முதலில் காட்டிய படம் என்று சொல்ல வேண்டும். இதன் மூலம் அவர்களின் மூளை எதைப் பதிவு செய்தது என்று அறிந்து கொண்டனர். இப்படி 48 பேரின் படங்கள் காட்டப்பட்டன. இதிலிருந்து பெண்களின் படங்களை மூளை பகுதி பகுதியாகப் பதிவு செய்து வைத்திருந்தன என்றும் ஆண்களின் படங்களை ,மூளை முழுமையான ஒன்றாக பதிவு செய்து வைத்திருந்தன என்றும் அறியப்பட்டது  இரண்டாவது பரிசோதனை வித்தியாசமாகச் செய்யப்பட்டது. In the second experiment, researchers preceded the body-part task with images of letters made up of a mosaic of tiny letters — an H made up of hundreds of little Ts, for example. They told some participants to identify the tiny letters, prompting their brains to engage in local processing. Other participants were asked to identify the big letter, revving up global processing. This latter group became less likely to objectify women, the researchers found. They no longer were better at recognizing a woman's parts than her whole body.  


சைட் அடிப்பதால் பெண்கள் பாதிக்கப்படுவது உண்மை
சைட் அடிக்கப்படும் போது பெண்கள் கணிதம் போன்ற பாடங்களைச் சிறப்பாகச் செய்ய முடியாது என்று கண்டிபிடித்துள்ளனர். பெண்கள் தம் உடலைத் தாமே பார்த்து அதிருப்தி அடைந்து அதனால் மன உளைச்சலுக்கும் சாப்பாட்டு முறைக் குழம்பலுக்கும் உள்ளாகின்றனர்.

சைட் அடித்தல் பற்றிய புள்ளி விபரங்கள் பற்றி அறிய இங்கு சொடுக்கவும்: சைட் அடித்தல்

Tuesday 31 July 2012

நகைச்சுவை: பக்சராஜ ஏன் ஒலிம்பிக் போட்டிக்குப் போகவில்லை?

பக்சராஜவின் நிறைவேறாத ஒரு கனவு இலண்டனில் ஒரு நிகழ்வில் தான் ஒரு முக்கிய ஆளாக பங்குபற்றி உரையாற்ற வேண்டும் என்பதே. இலண்டனில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்குப் போகவேண்டும் என்று முடிவு செய்து குந்தியா நாட்டுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இத்தாலிச் சனியாளிடம் தனது ஆசையை நிறைவேற்றும் படி பணித்தார். காமன் கூத்து நாடுகளின் விளையாட்டுப் போட்டிக்கு என்னை செங்கம்பளம் விரித்து வரவேற்றதைப் போல் ஒலிம்பிக் போட்டியிலும் எனக்கு செய்ய உடன் ஏற்பாடு செய் அல்லது எனது போர்க்குற்றங்களில் உனக்கு இருக்கும் பங்கை அம்பலப் படுத்துவேன் என்று மிரட்டினார் பக்சராஜ.

பக்சராஜவின் மிரட்டலுக்குப் பயந்த சனியாள் மோகன் மன்ஷிட்டை(Mohan Manshit) அழைத்து இந்தப் பக்சராஜவுடன் ஒரே ரோதனையாக இருக்கிறது. தொட்டதுக்கெல்லாம போர்க்குற்றத்தில் எனக்கு இருக்கும் பங்கை அம்பலப்படுத்துவேன் என்று மிரட்டுகிறான் அவன் ஒலிம்பிக் போட்டிக்குப் போகவேண்டும் அங்கு தனக்கு செங்கம்பள வரவேற்று வேண்டும் என்று மிரட்டுகிறான் என்றாள் தலையில் அடித்துக் கொண்டு. அதற்கு மோகன் மன்ஷிட் ஐய்ய்ய்ய்யோ ஐய்ய்ய்ய்யோ ஒலிம்பிக் என்ன புதுகில்லியிலா நடக்குது. நாங்கள் செங்கம்பள வரவேற்பு ஏற்பாடு செய்ய. அது செய்ய முடியாது, இலண்டனில் ஒலிம்பிக் நடக்கும் இடத்துக்கு அண்மையாக ஓரிடத்தில் காமன் கூத்து நாடுகள் சபையின் விளையாட்டுத் தொடர்பாக ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்து அதை பக்சராஜ தொடக்கி வைத்து உரை நிகழ்த்தவும் செங்கம்பள வரவேற்புச் செய்யவும் ஏற்பாடு செய்யலாம் என்றார். அந்த ஏற்பாடு பற்றி பக்சராஜவிற்கு அறிவிக்க அவர் மிகவும் மகிழ்ந்தார்.

தான் இலண்டனில் சிங்களம், ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, ஜேர்மன், லத்தின், இந்தி, குஜராத்தி, மலையாளம், உருது, சீனம் ஆகிய மொழிகளில் காமன் கூத்து நாடுகள் சபையின் விளையாட்டு மாநாட்டில் உரையாற்ற வேண்டும். அது மிகச் சிறப்பாக அமைய வேண்டும். நல்ல பயந்தரக்கூடிய வகையில் ஒத்திகை முதல் செய்து பார்க்க வேண்டும். அந்த ஒத்திகைக்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கடா என்று தனது உதவியாளர்களிடம் பணித்தார். இலண்டன் மாநாட்டு மண்டபம் போல் ஒன்றை உருவாக்கி பக்சராஜவை  அழைத்து அவரை மேடையில் ஏற்றி மேடைக்கு முன்னர் அவர் பேச வேண்டிய எழுத்துக்கள் இருக்கும் அதைப்பார்த்து நீங்கள் வாசிக்க வேண்டியதுதான் என்றனர். பக்சராஜ மேடையில் ஏறு தனது வாசிப்பைத் தொடங்கினார். ஓ.....ஓ....ஓ......ஓ.....ஓ,,,,,என்றார். அப்போது அவரது உதவியாளர் ஓடிவந்து என்ன வாசிக்கிறீர்கள் மாத்தையா என்றார். அவர் தன் முன் உள்ள ஐந்து வட்டங்களைக் காட்டினார். அதற்கு உதவியாளர் அது நீங்கள் வாசிக்க வேண்டிய உரை அல்ல. அது ஐந்து வளையங்கள் கொண்ட ஒலிம்பிக் சின்னம். அதற்குக் கீழ் ஓடிக் கொண்டிருப்பதுதான் நீங்கள் வாசிக்க வேண்டிய வசனம் என்றார். அப்போது அங்கு வந்த தம்பி ஓட்டைவாய அண்ணே நீங்கள் இலண்டனுக்குப் போவது அங்குள்ள தமிழர்களுக்குத் தெரிந்து விட்டது பெரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்றாங்கள் என்றார். அதற்கு பக்சராஜ ஆர்ப்பாட்டம் தானே செய்து விட்டுப் போகட்டும் அவங்களால் எனக்குக் கிட்டவும் வர முடியாது. அவங்கள் எப்பவும் ஆர்ப்பாட்டம்தான் செய்வாங்க வன்முறையாக எதுவும் செய்ய மாட்டாங்கள் என்றார். அதற்கு தம்பி ஓட்டைவாய அதுமட்டுமல்ல நீங்கள் பேசவிருக்கும் மாநாட்டில் பங்கு பற்ற ஐம்பது தமிழர்கள் அனுமதிச் சீட்டும் வாங்கிவிட்டாங்கள். நீங்கள் உரையாற்றும் போது தண்ணீர் குடிக்க வைத்திருக்கும் பாத்திரங்களுக்குள் சிறிநீர் கழித்து வைத்திருந்து உங்கள் மேல் வீசப் போகிறாங்களாம். போதாக்குறைக்கு நீங்க பேசவேண்டிய வசனத்துக்கும் ஒலிம்பிக் சின்னத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் தடுமாறுகிறீர்கள் இலண்டன் போய் உங்கள் மானத்தை கப்பல் ஏற்ற வேண்டாம். இலண்டன் பயணத்தை இரத்துச் செய்யவும் என்றார். பக்சராஜவும் தன் இலண்டன் பயணத்தைக் கைவிட்டார்.

Monday 30 July 2012

இலங்கை இந்திய ஒப்பந்தம்: கேணல் ஹரிகரனின் கோணல் கதை

அரசியல் அரைவேக்காடு ராஜிவ் காந்தியும் முதுபெரும் குள்ள நரி ஜே ஆர் ஜயவர்த்தனவும் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையைத் தீர்ப்பது என்ற போர்வையில் ஒப்பந்தம் செய்து 25 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இதைப்பற்றி இந்தியாவின் முன்னாள் உளவுத் துறை அதிகாரியான கேர்ணல் ஹரிஹரன் ஒரு கட்டுரையை வரைந்துள்ளார். அதைப் பல பார்ப்பன ஊடகங்களும் சிங்கள் ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்துள்ளன. கேர்ணல் ஹரிகரன் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அடிக்கடி கொச்சைப் படுத்தி எழுதி வரும் ஒருவர். 2009 மே மாதம் இலங்கையில் போர் "முடிந்தவுடன்" இனித் தமிழர்களுக்கு உள்ள ஒரு தெரிவு Hobson Choice தான் என்று எழுதியவர். Hobson Choice என்பது ஆங்கிலத்தில் வழக்கொழிந்து போன வார்த்தைத் தொடர். அதன் பொருள் கொடுப்பதை பெற்றுக் கொள்ள வேண்டியதுதான். தமிழர்கள் ஒரு பிச்சைக்கார நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர் என்ற பொருள்பட எழுதியவர்தான் இந்த கேர்ணல் ஹரிகரன்.

ஹரிகரனின் பேய்க்கதை: பிரிக்கப் போனதும் பிரிவதைத் தடுக்கப் போனதும்
A Tale Of Two Interventions (இரு தலையீடுகளின் கதை)  என்னும் தலைப்பில் கேர்ணல் ஹரிகரன் கதை விட்டுள்ளார். இதில் அவர் 1971இல் இந்திரா காந்தி கிழக்குப் பாக்கிஸ்த்தான் பிரச்சனையில் தலையிட்டதையும் 1987இல் அரசியல் கற்றுக் குட்டி ராஜிவ் காந்தி இலங்கையில் தலையிட்டதையும் ஒப்பிடுகிறார். இரண்டு தலையீடுகளிலும் ஹரிகரன் ஒரு படை வீரனாகப் பங்குபற்றினாரம் இரண்டு தலையீட்டுக்களுக்கும் அடிப்படையில் பெரும் முரண்பாடு இருந்தது. 1971இல் இந்தியா செய்த தலையீடு பாக்கிஸ்தானைத் பிரித்து புது நாடு உருவாக்கச் செய்யப்பட்ட தலையீடு. 1987இல் இலங்கையில் செய்த தலையீடு பிளவு பட இருந்த இலங்கையை பிளவுபடாமல் பாதுகாக்கச் செய்யப்பட்ட தலையீடு. சிங்கள் அமைச்சர்களே இந்திய "அமைதிப்படை" வந்திருந்திருக்காவிடில் இலங்கை இரு நாடுகளாகப் பிளவு பட்டிருக்கும் என்றனர். பாக்கிஸ்த்தானின் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டும் என்று இந்தியா ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால் இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்போம் என்ற அடை மொழியுடன் தான் இந்தியாவின் சகல அரசதந்திர அறிக்கைகளும் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளின் பேச்சுக்களும் 1983இல் இருந்து இன்று வரை வந்து கொண்டிருக்கின்றன. 1987இல் இந்தியப் படைகள் இலங்கை வரமுன்னர் இலங்கையில் பல படைக்கலன்கள் ஏந்திய குழுக்கள் செயற்பட்டுக் கொண்டிருந்தன. அவை ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டாலும் ஒன்றுக்கு ஒன்று உதவி செய்ததும் உண்டு இணைந்து தாக்குதல்கள் நடாத்தியதும் உண்டு. இலங்கைப் படையினர் தமது முகாம்களை விட்டு வெளியேற அஞ்சிக் கொண்டிருந்தனர். இலங்கையின் எந்தப்பகுதியிலும் தாக்குதல் நடத்தும் திறனை தமிழ் போராளிக் குழுக்கள் கொண்டிருந்தன. பல பிரதேசங்கள் தமிழ் போராளிக் குழுக்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. `இந்த நிலையை வளரவிட்டால் இலங்கையில் தமிழர்கள் தமக்கு என ஒரு நாட்டை அமைத்து விடுவார்கள் என்று அஞ்சியே இந்தியா இலங்கையில் தலையிட்டதை ஹரிகரன் மறைத்து விட்டார். இலங்கையில் சண்டை நடந்து நாடு பிரிவடைவதையோ அல்லது ஒரு சமாதானத்தின் மூலம் இந்தியாவில் உள்ளதிலும் பார்க்க அதிக அளவு அதிகாரம் கொடுக்கும் ஒரு அரசியல் தீர்வு அடைவதையோ இந்தியா விரும்பவில்லை.



ஹரிகரனின் விசர்க்கதை:இந்தியா அயலவர் நலன் கருதியது            இந்திரா காந்தி பாக்கிஸ்த்தானைத் துண்டாடி அதைப் பலவீனப் படுத்தும் நோக்கத்துடன் கிழக்குப் பாக்கிஸ்தானுக்கு தன் படையினரை அனுப்பினார். 1980களின் ஆரம்பப் பகுதியில் இலங்கையில் திருகோணமலைத் துறை முகத்தில் அமைய இருந்த அமெரிக்க கடற்படையினருக்கான எரிபொருள் மீள் நிரப்பு வசதிகளையும் சிலாபத்தில் அமைய இருந்த அமெரிக்க நீர் மூழ்கிக் கப்பல்களுக்கான அதி தாழ் அலைவரிசை(ultra-law wave) தொடர்பாடல் நிலையத்தையும் தடுக்கவும் அதற்குக் கைக்கூலியாக தமிழர்களின் ஆயுத போராட்டத்தை ஒழிக்கவும் இந்தியா அமைதிப் படை என்ற போர்வையில் இலங்கை வந்தது. இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை இந்தியச் சுயநலம் என்பதை ஹரிகரன் உணராமல் விட்டு விட்டார்.

 ஹரிகரனின் பொய்க்கதை: புலிகளுடன் எதிர்பாராத மோதல்
 இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப் படையினர் எதிர்பாராத விதமாக தமிழீழ விடுதலைப்புலிகளுடன் மோத வேண்டி ஏற்பட்டது என்று பொய் சொல்லுகிறார் தனது கட்டுரையில். இந்திய அமைதிப்படை இலங்கை வரமுன்னரே அப்போதைய இந்தியப் படைத் தளபதி சுந்தர்ஜீ சரம் கட்டிய இரண்டாயிரம் பையன்களை தன்னால் ஒரு வாரத்தில் ஒழித்துக் கட்ட முடியும் என்று ராஜீவ் காந்தியிடம் கணக்குக் காட்டியிருந்தார். டெலோ அமைப்பின் மூலம் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்ட முயன்று தோற்ற இந்தியா அதை நேரில் அமைதிப்படை என்ற போர்வையில் வந்து செய்ய முயன்றும் தோற்றது.



ஹரிகரனின் மோட்டுக்கதை: தலைமைத்துவப் பண்பு       இந்திராகாந்தியின் தலைமைத்துவம் சிறந்தது என்ற படியால் 1971இல் கிழக்குப் பாக்கிஸ்த்தானில் செய்த தலையீடு வெற்றியளித்தது ராஜீவ் காந்தியின் தலையீடு அவரின் தலைமைத்துவப் பண்புகள் சரியில்லாததால் வெற்றியளிக்கவில்லை என்கிறார் ஹரிகரன். 1971இல் இந்திரா காந்தியின் தலையீடு வெற்றியளித்தமைக்கு அவருக்கு காரணம் அவருக்கு சிறந்த ஆலோகர்கள் அதிகாரிகள் இருந்தமையும் அப்போதைய தளபதி சாம் மனெக்ஸாவும் பெரும் பங்காற்றினர் என்பதையும் ராஜிவ் காந்தியின் தோல்விக்கு அவருக்கு ஆலோசனை வழங்கிய ரொமேஷ் பண்டாரி போன்றவர்களும் ஹரிகரன் போன்ற கோணல் புத்தி உளவுத்துறைத் தலைமையும்தான் என்பதை ஹரிகரன் சொல்ல மாட்டார்.  ரொமேஸ் பண்டாரி வீட்டுத் திருமணம் ஜே ஆர் கொடுத்த பணத்தில் நடந்தது என்று பரவிய வதந்திகளை ஹரிகரன் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பார். தனது கட்டுரையில் ஒரு இடத்தில் இலங்கைக்கு தான் அமைதிப்படையின் உளவுத் துறை தலைவனாக சென்று இறங்கிய போது ஜே ஆர் ஜயவர்த்தன இந்தியப்படையை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மோத வைப்பார் என்று இலங்கையில் சிலர் தெரிவித்த கருத்துக்களை தான் நம்பவில்லை என்று தனது கட்டுரையில் ஹரிகரன் தெரிவித்துள்ளார். இதில் ஹரிகரன் ஒன்றில் பொய் சொல்கிறார் அல்லது தன் திறமையின்மையை அமபலப்படுத்துகிறார். அதாவது தாம் இலங்கை சென்றது புலிகளை அழித்தொழிக்கவே என்ற உண்மையை மறைக்கிறார். அல்லது இலங்கை ஆட்சியாளர்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய முடியாத ஒரு உளவுத் துறைத் தலைவனாக அவர் இருந்திருக்கிறார். அதுவும் சாதாரண குடிமக்களுக்குத் தெரிந்தவை களம் பல கண்ட ஹரிகரனுக்குத் தெரியவில்லை. பாக்கிஸ்த்தான் போரில் இறந்த இந்தியப்படையினர்களின் எண்ணிக்கை பாக்கிஸ்த்தானியப் படையினரின் எண்ணிக்கை பற்றி விலாவாரிய எழுதிய ஹரிகரனுக்கு இலங்கையில் எத்தனை அப்பாவித் தமிழர்களை இந்திய அமைதிப்படை கொன்றது என்பது பற்றி எழுதத் தெரியவில்லை.



ஹரிகரனின் புளுகுக்கதை: 13வது திருத்தமும் சுயாட்சியும்                   ராஜிவ் ஜேஆர் ஒப்பந்தத்தைப் பற்றி ஹரிகரன் இப்படிப் புளுகுகிறார்:
  • The most significant achievement of the Accord was the introduction of the 13th Amendment to the Sri Lankan Constitution which provided a degree of autonomy to the newly created provinces. And it still exists as the only constitutional tool available to redress Tamils. இலங்கைத் தமிழர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவு தன்னாட்சி வழங்கிய இலங்கை அரசியலமைப்புக்கு செய்யப்பட்ட 13வது திருத்தம் ஒப்பந்தம் செய்த மிகவும் குறிப்பிடத்தக்க சாதனை. அத்துடன் இன்றுவரை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்கக் கூடிய ஒரு அரசமைப்புக் கருவியாக இருக்கிறது.
ஐயோ பாவம். ஹரிகரனுக்கு தன்னாட்சி என்பது என்ன என்றும் தெரியவில்லை. 13வது திருத்தத்தில் உள்ள அதிகாரப் பரவலாக்கம் என்ன என்பது பற்றியும் தெரியவில்லை. 13வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் பிரபல சட்ட அறிஞர் நடேசன் சந்தியேந்திரா அது ஒரு உப்புச் சப்பில்லாத திருத்தம். அதில் அதிகாரப் பரவலாக்கம் என்பதே இல்லை என்று மிக விளக்கமாக எழுதியிருந்தார். அது வயது போன ஹரிகரனுக்கு நினைவில்லாமல் இருக்கலாம். ஆனால் ஓரிரு மாதங்களுக்கு முன்னரே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்தியாவால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் சட்ட விரிவுரையாளர்  குமரகுருபரன் 13வது திருத்ததில் உள்ள குறைபாடுகளை பிட்டு பிட்டு வைத்ததைக் கூட மறக்கும் அளவிற்கு ஹரிகரனுக்கு வயது போய்விட்டதா? இதை ஹரிகரன் சாதனை என்கிறார். அது இன்றுவரை ஒரு அரசமைப்புக் கருவியாக இருக்கிறதாம். ஆம் பிள்ளையாருக்கு நாளைக்குத் திருமணம் என்று கைலாய மலையில் எழுதப்பட்டிருக்கிறது. அந்த நம்பிக்கையில் பிள்ளையார் இன்றும் இருக்கிறார்.



 ஹரிகரன் மறைத்த கதை: அமைதிப்படையின் அட்டூழியங்கள்
ராஜீவ் ஜேஆர் ஒப்பந்தம் செய்த போது தமிழர்களுக்கும் ராஜிவிற்கும் இடையில் ஒரு கனவான் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி தமிழ் போராளிகள் தம் படைக்கலன்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் தமிழர்களுக்கும் போராளிகளுக்குமான பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யும். அந்தக் கனவான் ஒப்பந்தத்தை அயோக்கிய இந்தியா ஒரு சில மாதங்களுக்குள் மறந்துவிட்டு அப்பாவித் தமிழர்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்ததையோ அப்பாவிப் பெண்களைக் கற்பழித்ததையோ ஹரிகரன் மறைத்துவிட்டார். அந்தக் கனவான் ஒப்பந்தத்தின் பின்னர் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு அயோக்கிய இந்தியா உதவியது. இன்றும் இலங்கைப் படையினருக்கு உதவுகிறது.


ஹரிகரனின் புரட்டுக் கதை: கேந்திரோபாய வெற்றியா? இந்தியா சிறுபான்மையினர் போராட்டத்திற்கு உதவுமா?
ராஜீவ் ஜே ஆர் ஒப்பந்தம் இந்தியாவை அண்டியுள்ள பிரதேசங்களில் உருவாகும் கேந்திரோபாய தோற்றங்களை இந்தியா உதாசீனம் செய்யாது என்ற செய்தியையும் சிறுபானமை இனங்களின் சம உரிமைக் கோரிக்கைக்களுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்ற செய்தியையும் உலகிற்கு அனுப்பியது என்கிறார் ஹரிகரன் அவர்கள். The Accord sent home a strong message to all stakeholders: India would not ignore strategic developments in its close proximity in Sri Lanka, and would support the minority demand for an equitable deal. ஐயா சாமி நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? அம்பாந்தோட்டையில் சீனா துறை முகம் அமைத்தது இந்தியாவிற்கு அச்சுறுத்தல் என்று பல படைத்துறை ஆய்வாளர்கள் நிறைய எழுதி விட்டனர். இந்த strategic development இற்கு எதுவும் செய்ய முடியாத கையாலாகாத நிலையில் இருக்கும் இந்தியாவின் பரிதாபகரத்தை ஹரிகரன் அறிய மாட்டாரா? இலங்கையில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்டோர் சுற்றி வளைக்கப்பட்டு உணவு, மருந்து, குடிநீர் வழங்குவதைத் தடுத்து இலங்கைப் படையினர் மருத்துவ மனைகள் உட்பட எல்லா குடிமக்கள் நிலைகள் மீதும் கண்மூடித்தனமாக குண்டுகள் வீசிக் கொன்றபோது இந்தியா என்ன செய்தது? அந்தப் போர்க்குற்றங்களுக்கு தானும் உடந்தையாக இருந்தது. அதைத் தடுக்க முயன்ற மற்ற நாடுகளையும் தடுத்தது. இப்படி இருக்க ஏன் ஹரிகரன் முழுப்பூசணிக்காயை ஒரு பிடி சோற்றுக்குள் மறைக்கிறார்?


ஹரிகரனுக்குத் தெரியாத கதை
ஹரிகரன் ராஜீவ் ஜேஆர் ஒப்பந்தத்தை புகழோ புகழ் என்று புகழ்ந்து விட்டு கட்டுரையை முடிக்கத் தெரியாமல் முடித்திருக்கிறார். கடைசியில் The Accord failed to achieve its strategic goals in full என்று சொல்லியுள்ளார். ஆனாலும் ஒப்பந்தம் நல்லதுதானாம். இந்தியாவிற்கு சிறந்த தலைமை தேவையாம். The Accord failed to achieve its strategic goals in full என்பது தமிழர்களைப் பொறுத்தவரை பாதிக் கிணறு தாண்டிய கதைதான். 25 ஆண்டுகளாகியும் தமிழர்களுக்கு எந்தவித நன்மையையும் தராத ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தத்தில் தமிழர்களுக்குச் சாதகமாக ஒன்றையும் செய்யவில்லை. கொழும்பில் இந்த ஒப்பந்தத்தைப்பற்றி அடிபடும் கதையின் படி ஒப்பந்தம் செய்யப்படும் போது தமிழின விரோதிகளாக இருந்த இந்திய அதிகாரிகள் ராஜீவிற்குத் தெரியாமல் ஜே ஆர் ஜயவர்த்தனேயிற்கு இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படத் தேவையில்லை என்று சொல்லி விட்டார்கள. இதனால்தான் இன்றுவரை இந்தியா சும்மா உதட்டளவில் மட்டும் 13-வது திருத்தத்தின்படி இனப்பிரச்சனைக்குத் தீர்வு என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. 13-வது திருத்தத்தின் முக்கிய அம்சமான வடக்குக் கிழக்கு மாகாணங்களின் இணைப்பை இலங்கை இரத்துச் செய்த போது இந்தியா ஒருவார்த்தை கூட த் தெரிவிக்கவில்லை. இது கேணல் ஹரிகரனின் கோணல் கதையில் இடம்பெறவில்லை. தமிழர்களைப் பொறுத்தவரை ஒன்றுக்குமே உதவாததுதான் 13வது திருத்தம். இது தான் சகல பிரச்சனைக்கும் தீர்வு என இந்திய உளவாளிகளும் கைக்கூலிகளும் தொடந்து பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கின்றனர்.

Sunday 29 July 2012

இலண்டன் ஒலிம்பிக்கும் அரசியலும்

இலண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடாத்துவதற்கு பிரித்தானியத் தமிழர் பேரவையினரும் தமிழ் இளையோர் அமைப்பினரும் பிரித்தானியக் காவற்துறையான ஸ்கொட்லண்ட் யார்ட்டின் பணிமனைக்குச் சென்றபோது. நீங்கள் வருவீர்கள் என்று எமக்குத் தெரியும் எமது முன்னேற்பாடுகளில் அதுவும் ஒன்று என்று பதில் கூறப்பட்டது. இலண்டன் ஒலிம்பிக்கை அப்படி முன்னேற்பாடுகளுடன் செய்திருந்தனர்.
 திருத்தம்: இதில் பிரித்தானியத் தமிழர் பேரவை என்று குறிப்பிட்டது தவறு தமிழர் ஒருக்கிணைப்புக் குழு என்று  இருக்க வேண்டும். தவறுக்கு மன்னிப்புக் கோருகிறேன்

இலண்டனுக்குள் உலகம்
மேற்கு நாடுகளில் இலண்டன் நகரில்தான் அதிக அளவு பள்ளிவாசல்கள் இருக்கின்றன. இலண்டனில் அதிக உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் இடமாக ஓர் இந்துக் கோவில் இருக்கிறது. சீனாவிலும் பார்க்க சிறந்த சீன உணவுகளை இலண்டன் உண்வகங்களில் உண்ணலாம். கடைசியாக ஒலிம்பிக் போட்டி இலண்டனில் 1948இல் நடந்தது. அப்போது உலகப் போர் நடந்து கொண்டிருந்ததால் மற்ற நாடுகள் ஒலிம்பிக் போட்டிநடாத்த முன்வராததால் பிரித்தானியா முன்வந்து நடாத்தியது. 2012இல் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலண்டலின் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கின்றன. இலண்டனில் 2012 ஒலிம்பிக் நடக்கும் என்று அறிவித்தவுடன் இலண்டன் நகரில் குண்டு வெடித்தது.

தேசப்பிரச்சனை

இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய நான்கு நாடுகளையும் சேர்த்து பெரிய பிரித்தானியா என்பர். இம்மூன்று தேசங்களும் ஒன்றாக இணைந்துதான் ஒலிம்பிக்கில் போட்டியிடும். உலக கால்பந்தாட்டம், துடுப்பாட்டம், ரக்பி போன்ற போட்டிகளில் இவை தனித் தனியாகப் போட்டியிடுவதுண்டு. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க முன்னரே ஒலிம்பிக்கிற்கான கால் பாந்தட்டப் போட்டி ஆரம்பித்துவிடும். அதன் படி ஆரம்பித்த போட்டியில் பெரியபிரித்தானிய கால்பந்தாட்ட அணி விளையாடத் தொடங்கிய போது அதன் தேசிய கீதம் இசைத்த போது ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் வீரர்கள் தேசிய கீதத்தை சேர்ந்து பாடாதது பிரச்சனையைக் கிளப்பியது.
ஒலிம்பிக் போட்டிகளின் போது கோபி சிவங்தனின் தொடர் உண்ணாவிரதம்
சீன ஆடைகளைக் கொழுத்திய அமெரிக்கர்
அமெரிக்க விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகள் சீனவில் இருந்து தருவிக்கப்பட்டன. சீனா இருதரப்பு வர்த்தக நடவடிக்கைகளில் நேர்மையாக நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டில் அந்த ஆடைகளைக் கொழுத்திவிட்டு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிகின்றனர்.

பாதுகாப்புப் பிரச்சனை
மேற்கு நாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சம் இப்போது பெரும் பிரச்சனை. இலண்டன் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் இடங்களில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் நிறுத்தியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொறுபேற்ற ஜீ-4 நிறுவனம் தேவையான அளவு பாதுகாப்பு ஊழியர்கள் கிடைக்காததால் பிரச்சனை உருவானது. இதனால் பிரித்தானியப் படைத்துறையினர் காவலில் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுவாக கையில் துப்பாக்கி இன்றிப் பெரும் கிளர்ச்சிகளையே கையாளும் பிரித்தானியக் காவற்துறையினர் ஒலிம்பிக்கில் துப்பாக்கியுடன் நிற்கின்றனர்.

திரைப்பட இயக்குனர் காட்டிய திரைப்படம்
27/07/2012 வெள்ளிக்கிழமை இலண்டனில் ஒலிம்பிக் தொடக்க விழா 27 பில்லியன் பவுண்கள் செலவிட்டு ஒழுங்கு செய்யப்பட்டது. இதற்கான பொறுப்பு பிரபல திரைப்பட இயக்குனர் டனி பொயிலிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.  இயக்குனர் டனி பொயில் ஸிலம்டோக் மில்லியனார் படத்திற்காக ஒஸ்கார் விருது பெற்றவர். அவர் ஜேம்ஸ் போண்ட் பாத்திரத்துடன் பிரித்தானிய மகராணியையும் அவரது இரு நாய்களையும் நடிக்க வைத்த ஒரு குறும்படத்துடன் நிகழ்ச்சியை ஆரம்பித்தார். குறும்படம் இலண்டனில் பிரபல இடங்களான பாராளமன்றம், பிக் பென், வின்ஸ்டன் சேர்ச்சில் சிலை, கோபுரப் பாலம், போன்றவற்றையும் ஹரி பொட்டர் கதாசிரியர் புத்தகம் வாசிப்பதையும் உள்ளடக்கி இருந்தது. பிரித்தானிய மகராணி உலங்கு வானூர்தியில் வந்து ஆகாயக் குடை மூலம் ஒலிம்பிக் மைதானத்தில் இறகுங்குவது போல் நிகழ்வை டனி பொயில் அமைத்திருந்தார். ஒலிம்பிக் போட்டிக்கான மொத்தச் செலவு 9பில்லியன் பவுண்கள். பிரித்தானியப் பொருளாதரத்திற்கு மொத்தம் 13 பில்லியன் பவுண்கள் பெறுமதியான நன்மை கிடைக்கும் என்று கருதப்படுகிறது. மொத்தத்தில் இரு ஒரு இலாபம் தரும் வியாபாரம். இதற்குத்தான் ஒலிம்பிக் போட்டிகள் தமது நாட்டில் நடக்க வேண்டும் என்று பல நாடுகளும் போட்டி போடுகின்றன.

பிரித்தானியா சொல்ல முயல்வது
உலகின் பெரும் பகுதியை ஆண்டவர்கள். கொடுமைகள் செய்தவர்கள் என்ற தமது விம்பத்தை மாற்றி பிரித்தானியா ஒரு பல்லின மக்களையும் கொண்ட ஒரு நாடு என்பதை உலகத்திற்கு தெரியப்படுத்த பிரித்தானிய ஒலிம்பிக் விழாவைப் பயன்படுத்திக் கொண்டது. பிரித்தானியா என்றவுடன் பலரின் நினைவில் வரும் கைத்தொழிற்புரட்சி, பசுமையான விவசாய நிலங்கள், ஆடு வளர்ப்பு  செல்லப்பிராணிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போன்றவற்றை விழா பிரதிபலித்தது. பிரித்தானியர்களிடம் எனக்குப் பிடித்தவை அவர்களின் நகைச்சுவை உணர்வும் வீட்டின் பின்புறத்தில் வைத்திருக்கும் அழகிய பூந்தோட்டமும்தான். பிரித்தானியர்களின் நகைச்சுவை உணர்வை மிஸ்டர் பீன் என்னும் பாத்திரத்தின் மூலம் உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் ரோவான் அட்கின்ஸன் ஒலிம்பிக் விழாவில் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தினார்.  நூற்றுக் கணக்கான மருத்துவமனைப் படுக்கைக்களை இளம் நோயாளர்கள் மருத்துவத் தாதியர்களுடன் நடுவில் கொண்டு வந்து காட்சிப்படுத்தியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. பிரித்தானிய பெரிதும் சிரமப்பட்டு தனது மக்களுக்கு இலவச சுகாதார சேவைகளை செய்து வருகிறது என்பதை உணர்த்த இதைச் செய்திருக்கலாம். பழம் பெரும் விளையாட்டு வீரர்கள் மூலம் ஒலிம்பிக் சுடரை ஏற்றாமல் ஏழு இளம் வீரர்களை வைத்து இருநூற்றுக்கு மேற்பட்ட சுடர்களை ஏற்ற வைத்தனர். பின்னர் அந்த இருநூற்றுக்கு மேற்பட்ட சுடர்கள் ஒன்றாகி ஒரு சுடராக எரிந்து கொண்டிருக்கிறது. அந்தச் சுடர்களுக்கு மத்தியில் காணொளிப்பதிவுக் கருவியை பிபிசி எப்படி வைத்துக்காட்டியதோ? ஆர்டிக் மங்கீஸ், போல் மக்காட்னி போன்றோர் மூலம் தனது இசைத் துறைப் பாரம்பரியத்தையும் பிரித்தானியா வெளிப்படுத்தத் தவறவில்லை. பிரித்தானியாவிற்கு பெருமை சேர்க்கும் பல்கலைக் கழகங்கள், ஷேக்ஸ்பியர் நாட்கங்கள், ஐசாக் நியூட்டன் கண்டுபிடித்த புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்த போன்றவை எப்படி மறக்கப்பட்டன?

மழை குளப்பவில்லை
இலண்டனில் ஒரு நிகழ்ச்சியின் போது மழை பொழியாவிட்டால் அதுவே அந்த நிகழ்ச்சிக்கு 25% வெற்றியைக் கொடுக்கும். போக்கு வரத்து நெரிசல் இல்லாவிடில் மேலும் 10% வெற்றி. அந்த வகையில் இலண்டன் ஒலிம்பிக் பெரும் வெற்றியே.

பத்திரிகை விமர்சனங்கள்
The Times of India called the ceremony "dazzling", adding that London had "presented a vibrant picture of Great Britain's rich heritage and culture".

LA Times reporter said: "The Queen acting, JK Rowling reading in public, can you top this?"

Chicago Tribune and Los Angeles Times journalist Philip Hersh tweeted: "Did MTV produce this?"

New York Times: "visually stunning". .......  "hilariously quirky" celebration as a "noisy, busy, witty, dizzying production".

Huffington Post: London 2012: World's Press Heaps Praise On The Olympic Opening Ceremony

Washington Post: They rolled out dancing nurses and smokestacks, poked fun at their weather and gave us Mr. Bean. Amid green and pleasant pastures, they read from the storybook that is Britain, not just Shakespeare but Peter Pan and Harry Potter. And if the Opening Ceremonies of the London Games sometimes seemed like the world’s biggest inside joke, the message from Britain resonated loud and clear: We may not always be your cup of tea, but you know — and so often love — our culture nonetheless.

அமெரிக்க வேட்பாளர்
அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வேட்பாளர் மிட் ரொம்னி பிரித்தானிய ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக இல்லை என போட்டி தொடங்கமுன்னர் தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பினார். அமெரிக்க வேட்பாளர்கள் ஒவ்வொரு வார்த்தைகளையும் திறமை மிக்க ஆலோசகர்களின் ஆலோசனைகளுடன் தான் வெளிவிடுவார்கள். அவர் பிரித்தானியாவைத் தாக்கி தனது செல்வாக்கை அதிகரிக்க முயல்கிறார்.ஆனால் ஒலிம்பிக் அதிகாரிகள் பிரித்தானியாவின் தயார் நிலமை அண்மைக்காலங்களில் மற்ற நாடுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கான தாயார் நிலைகளிலும் பார்க்க மிகவும் சிறப்பாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தனர்.

வலது சாரி அரசியல்வாதியின் தாக்குதல்
இலண்டன் ஒலிம்பிக் வெள்ளை இனத்தவருக்கு மட்டும் இந்த நாடு உரிமையானது அல்ல இது ஒரு பல்லின மக்கள் வாழும் நாடு என்ற செய்தியுடன் ஆரம்பித்தது பல வலது சாரி அரசியல் வாதிகளை ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஐடன் பேர்லி என்னும் பழமைவாதக் கட்சிப் பாராளமன்ற உறுப்பினர் டுவிட்டரில்: "The most leftie opening ceremony I have ever seen - more than Beijing, the capital of a communist state! Welfare tribute next?" "Thank God the athletes have arrived! Now we can move on from leftie multi-cultural crap. Bring back red arrows (sic), Shakespeare and the Stones!" ஆரம்ப விழாவில் இடது சாரித்தன்மை நிறைந்திருந்தது. பொதுவுடமை நாடான சீனத் தலைநகரில் நடந்ததிலும் பார்க்க இலண்டன் விழா அதிக இடதுசாரித்தனமும் பல்லினக் குப்பையும் நிறைந்திருந்தது என்றார் அவர். இவரது டுவிட்டர் பதிவு பல சர்ச்சையைகளைக் கிளப்ப உள்ளது.

வட கொரியா தென் "கொடியாப்" பிரச்சனை
பெரிய நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதில் தாம் விற்பன்னர்கள் என்று பிரித்தானியருக்கு ஒரு தற்பெருமை உண்டு. அதை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் நிரூபிக்கவேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர். சீனாவில் கடந்த முறை ஒலிம்பிக் சிறப்பாக நடந்தது. ஆனால் அங்கு தீபெத்தியரின் ஆர்ப்பாட்டம் ஓர் இழுக்காக அமைந்தது. சீனர்கள் ஒலிம்பிக்கின் போது ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்திருந்தனர். தடையை மீறி தீபெத்தியர் ஆர்ப்பாட்டம் செய்ததால் பெரும் இரத்தக் களரி ஏற்பட்டது. ஆனால் இலண்டனில் ஆர்ப்பாட்டங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. கோபி சிவந்தன் என்னும் தமிழ் இளைஞன் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறான். தமிழர்கள் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டம் செய்யதனர். பெண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டி வட கொரியாவிற்கும் கொலம்பியாவிற்கும் இடையில் நடந்த போது வட கொரிய வீராங்கனைகளை அறிமுகம் செய்யும் போது அவர்களின் படமும் அவர்களின் தேசியக் கொடியும் பெரிய காணொளித் திரையில் காண்பிக்கப்பட்டது. ஆனால் வட கொரியத் தேசியக் கொடிக்குப் பதிலாக அவர்களின் பரம விரோதிகளான தென்கொரியாவின் தேசியக் கொடி காண்பிக்கப்பட ஆத்திரப்பட்ட தென்கொரிய வீராங்கனைகள் மைதானத்தில் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டு விளையாட மறுத்தனர். சகலருக்கும் மன்னிப்புத் தெரிவிக்கப்பட்டு பின்னர் சரியாக கொடிகளைக் காட்டிய பின்னரே விளையாட்டு ஒரு மணி நேரம் தாமதித்து ஆரம்பமாகியது.


இனக்கொலையாளிகள் இலங்கையும் இந்தியாவும்
ஒலிம்பிக் போட்டிக்கு மஹிந்த ராஜபக்ச வருவாரா என்பது பெரும் கேள்வியாக இருந்தது. இம்முறையும் அவரின் வருகைக்கு  எதிராக பெரும் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்கொட்லண்ட் யார்ட் மஹிந்த வரவில்லை இலங்கைப் பிரதம மந்திரிதான் வருகிறார் என்று பிரித்தானியத் தமிழர் பேரவையிடமும் தமிழ் இளையோர் அமைப்பிடமும் தெரிவித்திருந்தது. ஆனால் இண்டிப்பெண்டன்ற் பத்திரிகை மஹிந்த வருகிறார் என்றும் அவருக்கு எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டம் செய்யவிருப்பதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட நேரம் வரலட்சுமி விரதத்திற்காக இலண்டனில் உள்ள ஆலயங்களில் தமிழர்கள் நிரம்பி வழிந்தனர். சில செயற்ப்பாட்டாளர்கள் கூட ஆலயங்களில்தான் நின்றனர். இதனால் வழமையிலும் பார்க்க குறைந்த அளவில் ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் வந்திருந்தனர். ஒலிம்பிக் நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு நாட்டு விளையாட்டு வீரர்கள் ஊர்வலமாக வரும் போது அந்த நாட்டு தலைவர்களைக் காட்டுவார்கள். மஹிந்த ராஜபக்ச வந்தாரா என்பதை அறிய பலரும் காத்திருந்தனர். ஆனால் இலங்கை வீரர்களின் பவனியின் போது ஓரிரு கணங்கள் தான் காட்டினார்கள் அவர்களின் அரசத் தலைவர் இருந்த பக்கம் ஒளிப்பதிவுக் கருவிகள் திரும்பவில்லை. இந்திய வீரர்கள் வரும்போது  பிரித்தானிய மகாராணியின் முகம் காட்டப்பட்டது. இந்திய வீரர்கள் தலையில் காவி நிறத் தலைப்பாகை அணிந்து வருவதைப் பார்த்த தெரிந்த ஒரு குஜராத்தி சிறுமி They look like clowns என்றாள். இந்திய ஒலிம்பிக் சபையின் தலைவரை இலண்டன் சென்று ஒலிம்பிக் விழாவில் கலந்து கொள்வதை இந்திய நீதி மன்றம் தடை விதித்திருந்தது. இந்தியாவின் விளையாட்டுத் துறையின் ஊழல் நிலைமை அப்படி.

அத்து மீறி நுழைந்த ராகுல் மொக்கை காந்தியின் காதலி?
இந்திய வீரர்கள் அணிவகுத்துச் செல்லும் போது அவர்களுடன்  ஒரு மர்மமான பெண் நடந்து சென்றார். இவரிடம் ஒலிம்பிக்கின் அதிகாரபூர்வ அடையாள அட்டை இருக்கவில்லை. இந்திய மற் போர் வீரருடன் முன்னணியில் நடந்து சென்னார். இவர் ராகுல் காந்தியின் காதலி நோயெலா என்னும் பெண் என்று சொல்லப்படுகிறது. இதை உறுதி செய்ய முடியவில்லை. இவர் ஜாகீர் ஷாவின் என்பவரின் பேத்தியாம். இன்னொரு செய்தி இவர் பெயர் மதுரா ஹனி என்றும் சொல்கிறதுஇவர் அத்து மீறி நுழந்து நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இந்திய அணியினரை பத்து நொடிகள் மட்டுமே தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. இவரை அனுமதித்தமை தொடர்பாக இந்தியா தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. இந்திய அணியினருக்குத் தெரியாமல் இப்பெண் அவர்களுடன் கதைத்த படி இந்திய வீராங்கனைகளின் சீருடையான மஞ்சள் சேலை இன்றி எப்படி நடக்க முடியும்? டெல்லியில் சோனியாவின் அடுப்பங்கரையிலும் மந்திரி சபையிலுமாக இரு அதிகார மையங்கள் இருப்பது போல் இந்திய ஒலிம்பிக்கிலும் இரு அதிகார மையங்கள் இருக்கிறதா?


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...