Saturday 20 October 2012

நிருபாமா ராவே இலங்கைப் போர்இந்தியாவின் கை மீறி நடந்ததா? கைங்கரியமா?

விகடன் குழும சஞ்சிகைகளை இந்திய உளவுத்துறையான் ரோ தமிழ் மக்கள் மத்தியில் பொய்ப்பிரச்சாரம் செய்வதற்கு தந்திரமாகப் பயன்படுத்துகிறதா என்ற சந்தேகம் நியாயமானதே. பல தடவைகளில் விகடன் கபடத்தனமான கட்டுரைகளில் தமிழர்களுக்கு ஆதரவாகவும் கட்டுரைகளுக்கான பின்னூட்டங்களில் தமிழர்களின் போராட்டத்தை படு மோசமாகக் கொச்சைப் படுத்தியும் எழுதி இருந்தது. இலங்கை அரசின் கைக்கூலியாக விகடனைச் சேர்ந்த ஒரு ஊடகவியலாளர் செயற்பட்டதாக சந்தேகிக்கப்பட்டதும் உண்டு.

18/10/2012இலன்று வெளிவந்த ஆனந்த விகடன் இதழில் வெளியான இந்தியவின் வாஷிங்டனுக்கான தூதுவர் நிருபாம ராவின் பேட்டி வெளிவந்திருக்கிறது. இவர் முன்பு இந்தியாவின் கொழும்பிற்கான தூதுவராகச் செயற்பட்டவர். 200-ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் திரைமறைவில் அமெரிக்க அனுசரணையுடன் இலங்கையில் ஒரு இடைக்கால தன்னாட்சி அதிகார சபை அமைக்க வேண்டும் என விடுதலைப் புலிகள் ஒரு வேண்டுகோளை முன்வைக்க அதை அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க அதை ஏற்றுக் கொண்டார். அந்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபை இந்தியாவில் உள்ள மாநில் அரசின் அதிகாரங்களை விடக் கூடியது. ஊடனே இந்தியா கொதித்து எழுந்தது. இந்தியப் பார்ப்பன ஊடங்கங்கள் இடைக்கால தமிழீழம் என எழுதி சிங்கள இனவாதிகளை உசுப்பி விட்டனர். அப்போது கொழும்பிற்கான இந்தியத் தூதுவராக இருந்த நிருபாமா ராவ் சிங்கள இனவாதிகளை ஒன்றிணைத்தார். விளைவு ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டு மஹிந்த ராஜபக்ச பிரதம மந்திரியாக்கப்பட்டார். பெரும் இனக்கொலைக்கு வித்திடப்பட்டது.

இலங்கையில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நடக்கும் போது அரச படைகள் மூர்க்கத்தனமான தாக்குதல் போரை ஆரம்பித்தால் விடுதலைப் புலிகள் பின் நோக்கி நகர்ந்து கொண்டே அரச படைகளுக்கு ஆளணி இழப்பை ஏற்படுத்துவர். இந்த ஆளணி இழப்பும் பல படையினர் படு காயமடைந்து களத்தில் இருந்து விலகுவதும் கள நிலமையை விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக மாற்றும் அக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் தமது தாக்குதலைத் தீவிரப்படுத்தி அரச படைகளைப் பின்வாங்கச் செய்வர். அதனால் அரச படையினர் கைப்பற்றியதிலும் பார்க்க அதிக அளவு நிலப்பரப்பை இழப்பர். இலங்கை அரசின் ஜெயசிக்குரு படை நடவடிக்கை இதற்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு. ஆனால் 2008இலும் 2009இலும் நடந்த போரில் நிலைமை மாறிவிட்டது. போரில் சிங்களப் படையினருக்கு ஏற்பட்ட ஆளணி இழப்பை இன்னொரு நாட்டில் இருந்து வந்த 20,000மேற்பட்ட படையினர் ஈடு செய்தனர். அது எந்த நாடு என்பதை யாவரும் அறிவர். இப்படி இருக்கையில் இலங்கைப் போர் இந்தியாவின் கை மீறி நடந்தது என்று நிருபாம ராவ் சொல்வது முழுப் பொய்.

சீனா ஷாங்காய் ஒத்துழைப்பு சபையில் இலங்கை இணைந்து கொண்டது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வளர்வதை இந்தியா கண்டு கொள்ளாமல் இருப்பது பற்றி பல படைத்துறை ஆய்வாளர்கள் ஆச்சரியம் தெரிவித்தது உண்டு. சீனா இலங்கியில் பலவகையில் தனது பிடிகளை இறுக்குகிறது.
இலங்கைக்கு பண உதவி வழங்கும் நாடுகளில் சீனா முதலாமிடத்தில் நிற்கிறது.இலங்கைக்கு பெருமளவு படைக்கலன் விற்பனையையும் உதவியையும் சீனா செய்கிறது. சீனா தனது ரத்து(வீட்டோ) அதிகாரத்தைப் பாவித்து ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் மனித் உரிமை தொடர்பாக பாதுகாப்புச் சபை விவாதிக்காமல் பார்த்துக் கொண்டது. எல்லாவற்றிலும் மேலாக சீனா அம்பாந்தோட்டையில் அமைத்த துறைமுகம் அமைகிறது. இதைப்பற்றி இருமுறை குன் ஜன் சிங் இந்தியாவை எச்சரித்துள்ளார். ஒன்று 2009 ஜூனில் மற்றது ஆகஸ்டில்:

“This increasing closeness between Colombo and Beijing is a reason for concern for New Delhi. During the construction of the (Hambantota) port a large number of Chinese experts are to be expected to be present in the region and this is proving to be a security concern for the Indian side.”

இலங்கையில் சீன செயற்படுத்தும் பல்வேறு திட்டங்களில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சீனர்கள் இருப்பதாக லங்கா ஈ நியூஸ் இணையத் தளம் செய்தி வெளியிட்டது. இவர்களில் பெரும்பாலானோர் சீனாவின் செம்படை உறுப்பினர்களும் சிறைக்கைதிகளும் ஆவர்கள். இப்படி இருக்கையில் நிருபாம ராவ் விகடனுக்குச் சொன்னது:

  • ''இந்தியாவைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பாதுகாப்புத் துறையும் வெளியுறவு அமைச்சகமும் 24 மணி நேரமும் உன்னிப்பாகக் கவனிக்கின்றன. இலங்கையின் வட பகுதிகளான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய இடங்களுக்கு முதன்முதலாகச் சென்று வந்த வெளியுறவுச் செயலர் என்ற முறையில் சொல்கிறேன். அங்கே சீனாவின் ஆதிக்கம் இல்லை. சாலை போடுவதில் தொடங்கி வீடு கட்டித் தருவது வரை 500 கோடி ரூபாய் செலவில் மறு சீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவற்றை இந்தியாவே செய்துகொண்டிருக்கிறது.''
இந்திய வெளியுறவுத் துறையும் பாதுகாப்புத் துறையும் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் இருந்தால்தான் தமிழர்களின் போராட்டத்தை அடக்க முடியும் என உணர்ந்தே இலங்கையில் சீன ஆதிக்கத்தை வளரவிட்டன. சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் இருந்தால்தான் தமிழர்களின் போராட்டத்தை மீண்டும் தொடங்க முடியாமல் செய்ய முடியும் என்பதால் அவர்கள் இந்தியாவில் பாதுகாப்பைப் பலியிட்டாவது தமிழர்கள் போராட்டத்தை அடக்க முயல்கிறார்கள். தமிழன் எனப்பட்டவன் சூத்திரனோ இல்லியோ! அவாள் ஆளக்கூடாது. ஆளப்பட வேண்டியவாள்.

Friday 19 October 2012

தளர்வறியா மனம் தமிழினத்தின் மனம்

ஆபிரிக்காக் கண்டத்தில் ஆதி மனிதனாய்த் தோன்றி
சிந்து நதிக்கரையில் சீரான நாகரீக வளர்ச்சியுற்று
ஆப்கான் முதல் நியூசிலாந்துவரை பரவிப் பெருகி
ஆரியச்சதியால் பொதிகையோடு வேங்கடமும் கடந்தாலும்
தளர்வறியா மனம் தமிழினத்தின் மனம்

வேங்கடம் அம்பாறை ஆயிடைக் குறுகினாலும்
கதிரமலையில் கயவர் குடி கொண்டாலும்
உலகமே எமக்கெதிராய் திரும்பினாலும்
ஆரியமும் சிங்களமும் இணைந்தழித்தாலும்

தளர்வறியா மனம் தமிழினத்தின் மனம்

பொங்கி வந்த கடற்கோளால் அடுத்தடுத்து
அழிவுகள் பல கண்டாலும் செல்வங்கள் இழந்தாலும்
கன்னடமும் தெலுங்கும் துளுவும் மலையாளமும்
பிரிந்து சென்று பகையாளிகளாய் மாறினாலும்

தளர்வறியா மனம் தமிழினத்தின் மனம்

செருப்பாய் இங்கு இருப்பாய் தமிழா என
இந்தியாவும் நோர்வேயும் கூடிக் கூவினாலும்
சிங்களவர்க்குக் கைகொடுது எம் கழுத்தறுத்தாலும்
நெருப்பாய் எழுந்து மீண்டும் போராடும்
தளர்வறியா மனம் தமிழினத்தின் மனம்


எம்மைப் பிரிக்க இங்கு வந்த சிங்களக் கைக்கூலிகள்
பிரித்து  வைத்து பிரச்சனைகள் கொடுத்தாலும்

ஒற்றுமையாய் செய்வோம் ஓரிடத்தில் செய்வோம்
எனக் கூவிக் கொண்டே துரோகங்கள் செய்தாலும்
தளர்வறியா மனம் தமிழினத்தின் மனம்


எப்படி அழித்தாலும் எப்படிக் கெடுத்தாலும்
தளர்வறியா மனம் எம் சொத்தாக இருக்கும் வரை
தொடர்ந்து போராடுவோம் விழ விழ எழுவோம்
நாளை நமதாகும் நானிலம் நம்மைப் போற்றும்

Thursday 18 October 2012

உலகப் பொருளாதாரப் பிரச்சனையும் மக்கள் செய்ய வேண்டியவையும்

பல ஆண்டுகளாக வளர்ச்சியடையாமல் இருந்த உலகப் பொருளாதாரம் 1750-ம் ஆண்டு முதல் 1830-ம் ஆண்டு வரை நடந்த முதலாவது கைத்தொழிற் புரட்சியுடன் வளர்ச்சியடையத் தொடங்கியது. இது நீராவி எந்திரங்களின் கண்டுபிடிப்புடனும் தெருக்களின் அபிவிருத்தியுடனும் தொடர்புடையது. அதைத் தொடர்ந்து இரண்டாவது கைத்தொழில் புரட்சி மின்சாரம் கண்டுபிடித்த பின்னர் 1870இல் இருந்து 1900வரை நிகழ்ந்தது. மூன்றாவது கைத்தொழிற் புரட்சி கணனி, இணையம், கைப்பேசி போன்றவற்றின் உருவாக்கத்துடன் 1960இல் இருந்து நடந்து கொண்டிருக்கிறது.

உலகப் பொருளாதார மந்தம் 1930களின் நடுப்பகுதியில் இருந்து 1940களின் நடுப்பகுதிவரை ஏற்பட்டது. அந்தப் பொருளாதார மந்த நிலையில் இருந்து மீள பொருளாதார நிபுணர்கள் ஒரு வழி கண்டு பிடித்தனர். அதாவது அரசுகள் தமது செலவீனங்களை அதிகரித்து நாட்டில் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பது என்பது. அரசு செய்யும் முதலீடுகளால் நாட்டின் வேலை வாய்ப்பு அதிகரிக்க அதனால் மக்கள் கையில் பணப் புழக்கம் ஏற்பட; அதை வைத்து மக்கள் பொருட்களை வாங்க; மக்கள் பொருட்களை அதிகம் வாங்குவதால் உற்பத்தி பெருக; உற்பத்தி பெருகுவதால் மேலும் வேலை வாய்ப்பு அதிகரிக்க; மேலும் பணப்புழக்கம் அதிகரிக்க; மேலும் உற்பத்தி பெருக; இந்தச் சுழற்ச்சி தொடர; அரச வரிவருமானம் அதிகரிக்கும். இதை கீன்சியப் பொருளாதாரக் கோட்பாடு என்பர். இதனால் 1930களில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையில் இருந்து உலகம் விடுபட்டது.

மிகை பணவீக்கம்
இரண்டாம் உலகப் போரின் பின்னர் பல நாடுகள் தங்கள் நாடுகளில் பொருளாதாரத்தை அதிகரிக்க தமது செலவீனங்களைக் கூட்டின. இதை சரியாகக் கணிப்பிட்டுச் செய்யாமல் கன்னா பின்னா என்று செலவு செய்ய பல நாடுகளில் பணப்புழக்கம் அளவிற்கு மிஞ்சி அதிகரித்து பெரும் பணவீக்கத்தாலும் விலைவாசி ஏற்றத்தினாலும் பல நாடுகள் அவலப்பட்டன. இங்கு குறிப்பிட்டுச் சொல்வதானால் பிரேசிலில் 1980இல் 4 ஆக இருந்த கொள்வனவாளர் விலைச் சுட்டெண் 1990இல் 100,000,000ஆகியது. இந்த அனுபவத்தின் பின்னர் அரசு தனது செலவீனங்களை அதிகரிக்கக் கூடாது. அரசு பொருளாதார நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடக் கூடாது. அரசு நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பேண்டும். அத்துடன் நாட்டில் பணவழங்கலைப் பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு இணங்க மேற் கொள்ள வேண்டும் என்றும்  பொருளாதர நிபுணர்கள் ஆலோசனை முன் வைத்தனர்.

ஐரோப்பியப் பொருளாதரம்
ஐரோப்பியப் நாடுகளிற்பல இப்போது பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி இருக்கின்றன. 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் 17 நாடுகள் யூரோ என்னும் ஒரே நாணயத்தின் கீழ் ஒன்றிணைந்தன. உலகின் பெரிய பொருளாதாரமும் வளர்ச்சியடைந்த பொருளாதாரமுமானா யூரோ வலய நாடுகள் இப்போது ஒரு ஆழமான பொருளாதார மந்தத்தில்(deep recession) சிக்கியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரிய பொருளாதாரமான ஜேர்மனி 2013இல் 1% மட்டுமே வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2010இல் ஜேர்மனியப் பொருளாதாரம் 4.2% வளர்ந்திருந்தது. யூரோ நாணய வலய நாடுகளான ஸ்பெயின், கிரேக்கம், இத்தாலி போன்றவற்றின் பொருளாதார நெருக்கடியை தாங்கிப் பிடிக்க முடியாமல் ஜேன்மனியும் பிரான்சும் தவிக்கின்றது. உலகின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி நாடான ஜேர்மனி பல நெருக்கடிகளை எதிர் கொள்கிறது. ஜேர்மானியவில் திறமைமிக்க தொழிலாளர்கள் உண்டு. உயர்தர தொழில் நுட்பம் கொண்ட பொருளாதாரம் ஜேர்மனியினது
புலி வால் போல் கிரேக்கம்

யூரோ வலய நாடுகளைப் பொறுத்தவரை கிரேக்க நாட்டை வைத்திருப்பது புலிவாலைப் பிடித்து வைத்திருப்பதைப் போல். விட்டாலும் ஆபத்து வைத்திருப்பதும் பெரும் சுமை. தனது கடன் பளுவைப் பற்றி பொய்யான தகவல்களைக் கொடுத்து யூரோவில் இணைந்த கிரேக்கம் தனது பொருளாதார நெருக்கடியை மறைத்து வைத்திருந்தது. கிரேக்கம் யூரோ நாணயக் கட்டமைப்பில் இருந்து விலகினால் பல ஐரோப்பிய வங்கிகள் முறிவடையும். அது உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கிரேக்க அரசு கடும் சிக்கனத்தைக் கடைப்பிடித்தால் பெரும் உள்நாட்டுக் கிளர்ச்சி ஏற்படும். இதனால் என்ன விலை கொடுத்தாவது கிரேக்கத்தை யூரோ நாணயக் கட்டமைப்பில் வைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த விலையை கொடுப்பது யார்?  பன்னாட்டு நாணய நிதியமும் ஐரோப்பிய ஒன்றியமும் பெரும் பாடுபடுகின்றன.

ஸ்பெயின் - S(pain)
உலகப் பொருளாதாரத்திற்கும் ஐரோப்பியப் பொருளாதாரத்திற்கும் பெரும் தலையிடியாக இருக்கும் அடுத்த நாடு ஸ்பெயின். 16/10/2012இலன்று எதிர்பார்த்ததிலும் பார்க்க அதிக குறுங்காலக் கடன் பத்திரங்களை எதிர்பார்த்ததிலும் குறைந்த வட்டிக்கு ஸ்பெயின் விற்றது சற்று ஆறுதலளிப்பதாக இருக்கிறது. ஐரோப்பிய மத்திய வங்கி ஸ்பெயினிற்கு சிறிது மூச்சு விடும் இடைவெளியை வாங்கிக் கொடுத்தது. ஆனால் நீண்டகாலக் கடன் பத்திரங்களை இப்படி விற்க முடியுமா என்ற கேள்வி பெரும் கேள்வியாக இருக்கிறது. ஸ்பெயின் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பலன் தர மிக நீண்ட காலம் எடுக்கும்.

ஐக்கிய இராச்சியம்-ஆடிக் காற்றிலே அம்மியே பறக்கும் போது!
உலகிலேயே கட்டுக் கோப்பான வங்கிக் கட்டமைப்பைக் கொண்ட பிரித்தானிய வங்கிகள் ஆடிக் காற்றிலே அம்மியே பறக்கும் போது என்றபதத்தையே நினைவு படுத்துகின்றன. பல பிரித்தானிய வங்கிகள் தள்ளாடுகின்றன. தனியாரிடம் சகல பொருளாதார நடவடிக்கைகளையும் ஒப்படைக்கும் கொள்கை கொண்ட தற்போதைய ஆளும் கட்சியான பழமைவாதக் கட்சி இப்போது பொருளாதார நடவடிக்கைகளில் அரச தலையீடும் பங்களிப்பும் இல்லாமல் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படாது என்பதை உணர்ந்துள்ளது. 17/10/2012இல் வெளியான வேலையற்றோர் தொடர்பான புள்ளி விபரம் அரசுக்கு சற்று ஆறுதலளித்துள்ளது. வேலையற்றோர் தொகை 8.1% இல் இருந்து 7.9%இற்கு குறைந்துள்ளது. இதை ஐரோப்பிய ஒன்றியத்தின் 10.5%உடனும் ஸ்பெயினின் 25.1%உடனும் ஒப்பிட்டு பிரித்தானிய பெருமைப்படுகிறது. பிரித்தானியாவின் பணவீக்கமும் 2.2% ஆகக் குறைந்துள்ளது. ஆனால் பிரித்தானிய தனது கடன் பளுவை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதனால் அரச முதலீடுகள் மூலம் பொருளாதாரத்தை பெருமளவில் உக்குவிக்க முடியாத நிலை இருக்கிறது.

கடன் பட்டுக் கடன் அடைத்த அமெரிக்கா
அமெரிக்காவிலும் வேலையற்றோர் தொகை மற்றும் பணவீக்கம் தொடர்பான புள்ளி விபரங்கள் அரசுக்கு திருப்தியளிக்கக் கூடியதாக இருக்கின்றன. 2011இன் நடுப்பகுதியில் அமெரிக்க அரசின் கடன் கட்டுக்கடங்காமல் போனபோது அமெரிக்க அரசே ஸ்தம்பிதம் அடையும் ஆபத்து இருந்தது. பின்னர் அமெரிக்கா தனது கடனை ஓரளவிற்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. மேலும் கடன்களைப் பெற்று அமெரிக்கா தனது கடன் நிலையைச் "சீர்" செய்தது. ஆனால் வீடமைப்பு சம்பந்தமாக வந்த தகவல்களின் படி புதிய வீடமைப்புக்கள் அமெரிக்காவில் 15% அதிகரித்துள்ளது. புதிய வீடுகள் அமைக்கப்படும் போது அந்த வீட்டிற்காக செய்யும் கொள்வனவுகள் பொருளாதாரத்திற்கு ஒரு உந்துதலைக் கொடுக்கும். இதனால் அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என சிலர் கூறுகின்றனர். அமெரிக்கப் பொருளாதாரம் 2012இலும் 2013இலும் 2% வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இது ஒபாமாவின் 4.6% எதிர்பார்ப்பிலும் குறைய என்றாலும் ஐரோப்பிய ஒன்றியப் பொருளாதாரம் 0.2% சுருக்கமடையும் என்ற பன்னாட்டு நாணய நிதியத்தின் எதிர்பார்ப்புடன் ஒப்பிடுகையில் சிறந்ததே. அது மட்டுமல்ல பிரித்தானிய ஒஸ்ரேலியா நியூசிலாந்து ஆகியவற்றின் பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சி சிறந்ததாகும். ஆனால் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசேர்வின் தாமதமான நடவடிக்கைகளால் அமெரிக்காவின் வேலையற்றோர் தொகை மற்ற நாடுகளின் ஒப்பிடுகையில் மோசமானதே.

தள்ளாடும் வயோதிப சீனா
2007/2008இல் உலகில் நிகழ்ந்த பொருளாதார மந்த நிலையில் இருந்து மீளுவதற்கு சீனாவும் இந்தியாவும் பெரும் பங்காற்றின. 2008-ம் ஆண்டிலிருந்து மேற்கு நாடுகளின் பொருளாதாரங்கள் பெரும் பிரச்சனைகளைச் சந்தித்தபோது இந்தியாவும் சீனாவும் ஏறக்குறைய 10% பொருளாதார வளர்ச்சியை எட்டின. 2012இன் முதலாம் காலாண்டில் 8.1% ஆகக் குறைவடைந்த சீனப் பொருளாதார வளர்ச்சி இரண்டாம் காலாண்டில் 7.6% ஆகக் குறைவடைந்தமை உலகெங்கும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது. 2011இன் கடைசிக் காலாண்டில் இது 8.9%ஆக இருந்தமையும் கவனிக்கத் தக்கது. 2012இல் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனா தனது வட்டி வீதத்தை 2012 ஜூனில் குறைந்தது. பின்னர் அடுத்த வட்டி வீதக் குறைப்பை ஜூலையில் செய்தமை பல பொருளியல் வல்லுனர்களை திடுக்கிட வைத்தது. வட்டிவீதக் குறைப்பு சீன மக்களை அதிக கடன் பெறச் செய்தாலும் வர்த்தகத் துறையினர் கடன் பெறுவது அதிகரிக்கவில்லை இது சீனப் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி வீதக் குறைவைச் சந்திக்கலாம் என அஞ்சவைத்துள்ளது. ஜுன் மாதம் சீனாவின் பணவீக்கம் 2.2% மட்டுமே. இது சீனப் பொருளாதாரத்திற்கு ஆரோக்கியத்தைக் கெடுக்கக் கூடிய வகையில் அளவிற்கு அதிகமாகக் குறைந்துவிட்டது என்று சொல்லலாம்.  சீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப தனது பாதுகாப்புச் செலவீனத்தை அதிகரித்து வந்தது. வெளிநாட்டுப் பாதுகாப்பில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்த சீனா அண்மைக் காலங்களாக உள்நாட்டுப் பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டி இருந்தது. பொருளாதரப் பிரச்சனையால் சமூகப் பிரச்சனை உருவாகி அது பெரும் கிளர்ச்சியாக மாறாமல் இருக்க சீனா தனது உள்நாட்டுப் பாதுகாப்பிலும் செலவீனத்தைக் கூட்டியது.  சீனா எதிர் கொள்ளும் பெரிய சவால் மக்கள் தொகைக் கட்டமைப்பே. சீனாவில் இப்போது வயோதிபர்களின் தொகை அதிகமாயும் இளைஞர்களின் தொகை குறைவாகவும் காணப்படுகிறது. இது பெரிய பொருளாதரச் சிக்கல்களுக்கு வழிவகுக்கவிருக்கிறது.

இந்தியா - இளமை இதோ இதோ...ஊழல் அதோ அதோ.
இந்தியாவின் பலம் அங்கு அதிக இளையோர் தொக கொண்ட மக்கள் தொகைக் கட்டமைப்பே. ஆனால் திறமையற்ற ஊழல் நிறைந்த இருமுனை ஆட்சி அங்கு நிலவுகிறது. ஒன்று மன் மோகன் சிங் தலைமையிலான மந்திரி சபை. மற்றது சோனியா காந்தி குடும்பம் மற்றும் அவரது ஆலோசகர்கள் கட்சிக்கு நிதி கொடுக்கும் பண முதலைகள் கொண்ட இன்னொரு கும்பல். இதனால் நாட்டின் பொருளாதரக் கொள்கை மக்கள் நலன் சார்ந்ததாக இல்லாமல் சோனியா காந்தியினது குடும்பத்தினரதும் கட்சிக்கு பண் உதவி செய்வோரின் நலன் சார்ந்ததாகவும் இருக்கிறது. இதனால் இந்தியப் பொருளாதர வளர்ச்சி வீதம் குறைவடைந்துள்ளது.

பின்னிப் பிணைந்த உலகப் பொருளாதாரம்
இப்போது உலகப் பொருளாதாரம் மிகவும் பின்னிப் பிணைந்ததாகவும் ஒரு நாட்டில் ஏற்படும் பிரச்சனை பல நாடுகளைப் பாதிப்பனவாகவும் இருக்கின்றது. அத்துடன் இப்பாதிப்பு முன்னர் எப்போதிலும் இல்லாத வகையில் உடனடிப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியனவாகவும் இருக்கின்றது. வங்கிகள் பல நாட்டுப்பொருளாதாரங்களில் தங்கியிருக்கின்றன. உலக்ப் பொருளாதார வளர்ச்சி இப்போது கடனில் பெரிதும் தங்கியிருக்கிறது. ஆனால் கடனாளிகள் அளவிற்கு மிஞ்சி விட்டனர். சீரானதும் அதிக விலை அதிகரிப்பு இல்லாததுமான எரிபொருள் விநியோகத்தில் உலக பொருளாதாரம் பெரிதும் தங்கியிருக்கிறது. இந்தப் பின்னிப் பிணைப்பும் எரிபொருள் விநியோகமும் பொருளாதார நிபுணர்களால் சரியாக திட்டமுடியாத ஒரு சூழலை உருவாக்கியுள்ளது. தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட வேகமான வளர்ச்சி பல பொருளாதார சிந்தனைகளைக் காலாவதியாக்கிவிட்டது. ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பாரிய சமூக கலவரங்கள் இதுவரை நிகழாமைக்கு அங்குள்ள அரசுகள் பெருமிதமடையலாம்.

தனிப்பட்டோர் செய்ய வேண்டியது
உலகப் பொருளாதாரம் கடந்த 5 ஆண்டுகளாக நெருக்கடியில் இருக்கிறது.

தனிப்பட்ட ஒருவர் செய்ய வேண்டியவை:
  1. ஆடம்பரத்தைத் தவிர்த்தல்
  2. சேமிப்பு அதிகரித்தல்
  3. தேவையான காப்புறுதிகள் செய்தல்
  4. தொழில் பெறு திறனை அதிகரித்தல். புதிய தொழிற்பயிற்சி பெறுதல்.  ஒரு எஞ்சினியர் தேவை ஏற்படின் வாடகை வாகனச் செலுத்துனராக வேலைசெய்யும்  அளவிற்குப் பயிற்ச்சி பெற்றிருத்தல் போன்றவற்றைச் செய்தல் நன்று.
  5. தனி ஒருவரின் வருமானத்தில் தங்கி இருக்கக் கூடாது. ஒரு வீட்டில் பலரும் வேலை செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
  6. அரசுகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும்
  7. அரச ஊழல்களைத் தட்டிக் கேட்க வேண்டும்.
  8. வரிப்பணத்தை அரசு சரியாகச் செலவு செய்கிறதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
  9. வீட்டில் உள்ள பெறுமதியான பொருட்களைப் பாதுகாத்தல்.
  10. பில்களை அவ்வப் போது செலுத்துதல்.

Tuesday 16 October 2012

நகைச்சுவை: சோம்பேறிகளின் விதிகள்:

தொலைக்காட்சியின் ரிமோட்டை காணவில்லை என்றிருக்கும் போதுதான் தொலைக்காட்சியில் எமக்குப் பிடித்த நிகழ்ச்சி நடக்கும்.

குப்பைத் தொட்டி அண்மையில் இல்லாவிடில் உலகமே ஒரு குப்பைத் தொட்டி.

நிலத்தில் சிந்தப்படும் நீர் எப்படியும் காய்ந்தே ஆக வேண்டும்.

நீங்கள் தொடங்கியவற்றை முடிக்க வேண்டும் என்று அவசியமி...

நாளை என்பது தொடர்கதை.

சூரியனுக்கும் snooze பட்டன் தேவை.

வாழ்க்கைக்கு அவசியம் தேவையான கண்டுபிடிப்பு: copy & paste செய்யக்கூடிய பேனா அல்லது பென்சில்.

செய்ய வேண்டிய வேலைகள் அதிகமானால் செய்ய வேண்டியது படுக்கைக்குச் செல்லல்.
கிட்டனதாயின் வெட்டென மற.

பெற்றோர் கூப்பிடும் போது பேசாமல் இருக்க வேண்டும். குரலை உயர்த்தி திட்டத் தொடங்கும் வரை காத்திருக்கவும்.

C.L.A.S.S. = (C)ome (L)ate (A)nd (S)tart (S)leeping.

ரிமோட்டைக் காணாவிடில் தொலைக்காட்சியில் என்ன போகிறதே அதையே பார்த்து ரசிக்கவ்வும்.

வாழ்க்கையின் முதலாம் எதிரி: alarm clock.

படுக்கையில் இருந்து எழும்பும் போது சூரியன் உதிக்கும் வண்ணம் பிரபஞ்ச அசைவுகள் மாற்றப்பட வேண்டும்.

ஒரு நாளில் 24 மணித்தியாலங்கள் இருந்து தொலைக்கட்டும். ஆனால் சனி, ஞாயிறு மட்டும் நாளொன்றிற்கு 48 மணித்தியாலங்களாக இருக்க வேண்டும்

உலகத்தைக் கெடுத்த கண்டுபிடிப்பு: தேர்வு

மேசையில் இருந்து விழுபவற்றை எடுத்து மீண்டும் மேசையில் வைத்தால் அது மீண்டும் விழும்.

asdf என்பது சிறந்த பாதுகாப்பான கடவுச் சொல்.

Monday 15 October 2012

எரியும் சிரியாவும் சரியும் ஈரானிய நாணயமும்.


துருக்கியும் சிரியாவும் பழிக்குப் பழியாக ஒரு நாட்டின் மீது மற்ற நாட்டின் விமானம் பறப்பதை ஒரு புறம் தடை செய்ய இஸ்ரேலில் மர்மமான ஆளில்லா விமானம் ஒன்று மறு புறத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இரசியாவில் இருந்து சிரியா நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்றை தனது வான் பரப்பில் வைத்து படை விமானங்களால் இடை மறித்து தரையிறங்கச் செய்தது துருக்கி. ஏற்கனவே சிரியாவும் துருக்கியும் ஒன்றின் மீது ஒன்று எறிகணைத் தாக்குதலில் ஈடுபட்டிருந்தன.

இஸ்ரேலில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா வேவு விமானம் லெபனானிய விடுதலை இயக்கமான ஹிஸ்புல்லாவினால் அனுப்பப்பட்டது என்று அதன் பொதுச் செயலர் செய்யது ஹசன் நஸ்ரெல்லா உறுதி செய்துள்ளார். அது இஸ்ரேலின் படை நிலைகளை படம் பிடித்து நேரடி ஒளிபரப்பாக ஹிஸ்புல்லாவிற்கு அனுப்பியது. ஈரானின் ஆதரவுடன் இயங்கும் ஹிஸ்புல்லா ஈரானிற்காகவே இந்தப் பணியைச் செய்ததாகக் கூறப்படுகிறது. உலகில் முதல் முதலாக ஒரு விடுதலைப் படை ஆளில்லா வேவு விமானத்தை இன்னொரு நாட்டுக்குள் அனுப்பி வேவு பார்த்தது இதுவே முதற் தடவை. ஈரான் தனது அணு ஆய்வு நிலைகளுக்கு எதிராக இஸ்ரேலின் படைகள் என்ன தயாரிப்பு நிலைகளைச் செய்கிறது என்று அறியவே இந்த விமானத்தை அனுப்பியது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானுக்கு எதிராக பெரும் தாக்குதலுக்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதை ஈரான் இந்த ஆளில்லா வேவு விமானம் மூலம் அறிந்துள்ளது.

இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சரின் இரட்டை நாடகம்.
ஈரானுக்கு எதிராக வட அமெரிக்க நாடுகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் கொண்டுவந்துள்ள பொருளாதரத் தடைக்கு ஈரான் பணியாவிடில் ஈரானுக்கு எதிரான அமெரிக்க இஸ்ரேலிய படைகளின் தாக்குதல் நடக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இஸ்ரேலியப் பிரதமர் ஈரானுக்கு எதிரான ஒரு தாக்குதலை விரும்புகிறார். அவரைப் பொறுத்தவரை ஈரானுக்கு எதிரான தாக்குதல் காலம் கடந்து விட்டது. ஆனால் பராக் ஒபாமா நிர்வாகம் ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அவசரம் காட்டவில்லை. திரை மறைவில் இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேலியப் பிரதமருக்கு எதிராக இந்த விவகாரத்தில் செயற்பட்டார் என்றே கூறப்படுகிறது. இதனால் இஸ்ரேலின் ஈரான் மீதான தனித்த தாக்குதல் தடைப்பட்டது. ஈரானின் பதப்படுத்தும் யூரேனியம் இன்னும் அணுக்குண்டு தயாரிக்கும் நிலையை அடையவில்லை என அமெரிக்கா அறியும். பன்னாட்டு அணு வலு முகவரகமும் ஈரான் அணுக்குண்டு தாயாரிக்கப் போகிறது என்பதற்கு ஆதாரம் இல்லை என்கிறது.

 ஈரானிய நாணயத்தின் வீழ்ச்சி
ஈரானிய நாணயமான ரியால் பெரும் மதிப்பிறக்குத்துக்கு உள்ளாகியது. ரியாலின் வீழ்ச்சியைத் தடுக்க ஈரானிய அரசோ அதன் மத்திய வங்கியான மார்க்காஜியோ ஏதும் செய்ய முடியாத கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. ஈரான் மீதான தாக்குதல் நடக்குமா என்ற அச்சமும் பொருளாதரத் தடையும் ஈரானிய ரியாலின் மதிப்பிறக்கத்திற்குக் காரணம் என்று ஈரானிய ஆட்சியாளர்கள் சொல்லி பழியை மேற்குலகில் போடுகின்றனர். ஆனால் ஈரானியப் பாராளமன்ற சபாநாயகர் அலி லரிஜானி அரசின் தவறான கொள்கைகளே ரியாலின் வீழ்ச்சிக்கு பெரும் காரணமாகும் என்றார். ரியாலின் வீழ்ச்சிக்கான காரணத்தில் 80% இற்கு அரசே பொறுப்பு என்கிறார். 2009இல் இருந்தே ரியால் வீழ்ச்சி காணத் தொடங்கி விட்டது. பல ஈரானியப் பொருளியலாளர்கள் ரியாலின் வீழ்ச்சிக்கு அரசே காரணம் என நம்புகின்றனர் என்று அவர்களிடை மேற் கொண்ட கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது. ஈரானிய அரசு பொருளாதாரத் தடைக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக வீராப்புப் பேசுவதிலேயே அதிக கவனம் செலுத்தியது. ஈரானிய ஆட்சியாளர்கள் ஈரானிய மத்திய வங்கி மார்க்காஜியின் நடவைக்கைகளில் தலையிட்டமையும் ரியாலின் வீழ்ச்சியை தடுக்க முடியாமைக்கான காரணம் எனப்படுகிறது. 2012 ஜனவரியில் ஒரு அமெரிக்க டாலருக்கு 15000 ஆக இருந்த ரியால் ஒக்டோபரில் 36000 ஆக மாறியது. 2012 ஒக்டோபர் நடுப்பகுதில் ஐரோப்பிய ஒன்றியம் ஈரான் மீதான பொருளாதாரத் தடையையும் ஈரானிடமிருந்து எரிபொருள் வாங்கும் தடையையும் இறுக்கியுள்ளது. ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் இப்போது காப்புறுதி இன்றி கடலில் மிதக்கின்றன. ஈரான் மீதான பொருளாதாரத் தடையால் அவற்றிற்கு காப்புறுதி எடுப்பது சிரமமாக இருக்கிறது. பெரும்பாலான கப்பல் காப்புறுதி நிறுவனங்கள் ஐரோப்பாவைச் சேர்ந்தவை. அவை ஈரானியக் கப்பல்களுக்கு காப்புறுதி செய்ய மறுத்துவிட்டன. ஏற்கனவே பன்னாட்டுக் கொடுப்பனவு முறைமையான SWIFT(Society for Worldwide Interbank Financial Telecommunication)இல் இருந்து ஈரான் வெளியேற்றப்பட்டுள்ளது. ஈரான் சீனாவுடனும் இந்தியாவுடனும் பண்டமாற்று முறையில் வர்த்தகம் செய்கிறது. 2013 இன் முற்பகுதியில் ஈரானியப் பொருளாதாரம் உடைந்துவிடும் என்று பல மேற்குலக ராஜதந்திரிகள் நம்புகின்றனர். ஆனால் சில பொருளாதார நிபுணர்கள் ஈரானின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு முப்பது பில்லியனில் இருந்து நூற்றுப் பத்து பில்லியன் அமெரிக்க டாலர்கள்வரை இருக்கலாம். இது பற்றி சரியான தகவல் தெரியாமல் எதிர்வு கூறமுடியாது என்கின்றனர்.

தாக்குதல் நாடும் இஸ்ரேலும் ஆட்சி மாற்றம் நாடும் அமெரிக்காவும்
 அணுக் குண்டு உற்பத்தி செய்யக்க் கூடிய பதப்படுத்தப்பட்ட யூரேனியம் இஸ்ரேலிடமும் ஜப்பானிடமும் உள்ளன. ஆர்ஜென்ரீனாவும் ஜேர்மனியும் பிரேசிலும் நெதர்லாந்தும் யூரேனியம் பதப்படுத்துகின்றன.  ஆனால் ஈரானின் பதப்படுத்தல் மட்டும் பெரிதாக்கப்பட்டுள்ளது. யூரேனியத்தை ஈரான் பதப்படுத்துவதை சாட்டாக வைத்து  ஈரான் மீது ஒரு தாக்குதலை இஸ்ரேலும் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஐக்கிய அமெரிக்காவும் விரும்புகின்றன. இதில் இரண்டும் இணைந்தும் முரண்பட்டும் கொள்கின்றன. ஈரான் பதப்படுத்துவதை நிறுத்தினாலும் ஈரானிற்கு எதிரான பொருளாதரத் தடை தொடரும் என்பதை ஈரானிய ஆட்சியாளர்கள் உணர்ந்துள்ளனர்.

சிரியாவும் ஈரானும்
சிரியாவில் பஷார் அல் அசாத் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டால் ஈரானில் மஹ்மூத் அகமதிநிஜாத்தின் ஆட்சியும் விரைவில் விழுந்துவிடும் அபாயம் உள்ளது. சிரியாவில் ஆட்சி கவிழாமல் இருப்பதில் ஈரானும் இரசியாவும் அதிக கவனம் செலுத்துகிறது. சிரியாவில் ஒரு அமெரிக்க சார்பு அரசு அமைந்தால் அது வட அமெரிக்காவில் மேற்குலக ஆதிக்கத்தை அதிகரித்துவிடும் என்று இரசியாவும் சீனாவும் நம்புகின்றன. அதனால் சிரியாவில் பெரும் இரத்தக் களரி நடக்கிறது. ஈரானுக்கு எதிராக எடுக்கப் படவேண்டிய நடவடிக்கைகளில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒன்றுபடுவதும் முரண்படுவது போல் சிரியாவிற்கு எதிராக என்ன செய்ய வேண்டும் என்பதில் அமெரிக்காவும் துருக்கியும் முரண்படுகின்றன. சிரியாவில் இருந்து துருக்கிக்குள் வீசப்பட்ட எறிகணைகள் இரு நாடுகளுக்கு மிடையிலான முறுகலை அதிகரித்தது. முன்பு ஈராக்கில் உள்ள குர்திஷ் இன மக்கள் மீது எல்லை தாண்டித் தாக்குதல் நடாத்துவதற்காக துருக்கி தனது நாட்டின் மீது தானே ஏவுகணையை வீசிவிட்டு அது குர்திஷ் கிளர்ச்சிக்காரர்களின் வேலை எனக் குற்றம் சாட்டி ஈராக் எல்லை தாண்டிச் சென்று குர்திஷ் மக்களைத் தாக்கியது என்று முன்பு செய்திகள் வெளிவந்தன.  சிரியாவில் ஆட்சியாளர்களுக்கு எதிராக 18 மாதங்களாக நடக்கும் போராட்டத்தால் பாதிப்படைந்த பல்லாயிரம் சிரியர்கள் துருக்கி நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். இது துருக்கிக்கு பெரும் தலையிடியாக அமைந்துள்ளது. இதனால் தனது படைகளை சிரியாவிற்குள் அனுப்பி அங்கு ஒரு பாதுகாப்பு வலயத்தை உருவாக்கி தனது நாட்டுக்குள் சிரிய மக்கள் வராமல் பார்த்துக்கொள்ள துருக்கி திட்டமிட்டுள்ளது. சிரிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து துருக்கிய பராளமன்றம் கூட்டப்பட்டு சிரியாவிற்குள் எல்லை தாண்டிப் படை நடவடிக்கைகள் மேற்கொள்ளும் ஆணையை துருக்கிய அரசு பெற்றுள்ளது. சிரியா மீது தாக்குதல் செய்ய ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வர முடியாது. ஏற்கனவே கொண்டுவரப்பட்ட இரு தீர்மானங்களை இரசியாவும் சீனாவும் தமது இரத்து அதிகாரத்தை(வீட்டோ) பாவித்து இரத்து செய்து விட்டன. சிரியாமீதான படை நடவடிக்கையை அமெரிக்க அரசு அதன் அதிபர் தேர்தலுக்குப் பின்னர் வரை ஒத்தி வைத்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்திருந்தன. நவம்பர் ஆறாம் திகதி அமெரிக்கத் தேர்ந்தல் முடிவடைந்த பின்னர் சிரியாமீது ஒரு படை நடவடிக்கை மேற் கொள்ள அமெரிக்காவிற்கும் மற்ற நேட்டோ நாடுகளுக்கும் ஒரு சாட்டு தேவை. நேட்டோ நாட்டின் ஓர் உறுப்பினரான துருக்கிக்கும் சிரியாவிற்கும் மோதல் என்பதை சாட்டாக வைத்து சிரியாமீது நேட்டோப் படைகள் தாக்குதல்களை மேற் கொள்ளலாம். 2008இற்குப் பின்னர் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியைச் சாட்டாக வைத்து தங்களுக்குப் பிடிக்காத ஆட்சியாளர்களை பதவிகளில் இருந்து அகற்றுவதில் மேற்கு நாடுகள் அதிக கரிசனை காட்டி வருகின்றன. துனிசியாவில் பென் அலி லிபியாவில் மும்மர் கடாஃபி ஆகியோர் வெற்றிகரமாக பதவியில் விலக்கப்பட்டனர். ஆனால் மேற்குல சார்பு ஆட்சியாளர்கள் பாஹ்ரெயினிலும் சவுதி அரேபியாவிலும் தமக்கு எதிரான கிளர்ச்சிகளை வெற்றிகரமாக அடக்கிவிட்டனர்.

சிரியாவில் பெரும்பான்மையான இனக்குழுமம் சுனி முஸ்லிம்கள். ஆனால் அங்கு ஆட்சியைக் கையில் வைத்திருப்பவர்களும் அதிகமான அரச படையில் இருப்பவர்களும் அலவைற் முஸ்லிம்கள் என்ற இனக் குழுமம். அலவைற் இனக்குழுமம் மொத்த மக்கள் தொகையில்20% மட்டுமே.  கிளர்ச்சிக்காரர்களில் பெரும்பானமையானவர்கள் சுனி முஸ்லிம்கள். இந்நிலையில் இன்னும் எத்தனை காலம் பஷார் அல் அசாத்தின் ஆட்சி தாக்குப் பிடிக்கும்? சிரிய ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் சிறிது சிறிதாக அரச படைகளிடம் இருந்து நிலப்பரப்புக்களைக் கைப்பற்றி வருகின்றனர்.  அமெரிக்க அதிபர் தேர்தலின் பின்னர் சிரியாவின் பலவீனமான விமான எதிர்ப்பு முறைமை சிதைக்கப்பட்டு அதன் விமானப் படை அழிக்கப்படலாம். அமெரிக்கா ஒரு படைத்துறை வல்லுனர்களை ஜோர்தானிற்கு அனுப்பி சிரியாவின் வேதியியல் படைக்கலன்களை பத்திரமாக அப்புறப்படுத்தும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. ஜோர்தான் இஸ்ரேலுடன் நட்புறவை வைத்திருக்கும் நாடு. துருக்கி அப்படி அல்ல. இதனால் அமெரிக்கா ஜோர்தானில் தனது படை நிபுணர்களை இறக்கியுள்ளது. துருக்கி சிரிய மோதல்களைச் சாட்டாக வைத்தும் பெருகி வரும் அகதிகள் பிரச்சனையை அடிப்படையாக வைத்தும் நேட்டோப் படைகள் சிரியாவிற்கு எதிராகக் களம் இறங்கும் போது சீனாவாலும் இரசியாவாலும் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்படலாம். பிரித்தானியாவில் பயின்ற மருத்துவரான அல் அசாத் இப்போது போரை நேரடியாக வழி நடத்துகிறார். ஐரோப்பிய ஒன்றியம் சிரியச் சொத்துக்களை முடக்கியுள்ளது. சிரிய அரசு தடை செய்யப்பட்ட படைக் கலன்களைப் பாவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கோபி அனன் சிரியாவிற்கான சமாதானத் தூதுவர் பதவில் இருந்து விலகிய பின்னர் நியமிக்ககப்பட்ட லக்தர் பிராஹிமியின் நடவடிக்கைகளும் வேண்டுகோள்களும் இதுவரை எந்தப் பலனையும் தரவில்லை. சிரியா மேலும் எரியப் போகிறது.

Sunday 14 October 2012

கூகிளுக்கு அகப்பட்ட விநோதமான படங்கள்

தொழிற்சாலையில் இருந்து வரும் விநோதமான புகை.

உலகெங்கும் தனது ஒளிப்பதிவுக் கருவிகளால் படம் பிடித்துக் கொண்டிருக்கிறது கூகிள். பல தகவல் திருட்டுக்களில் ஈடுபட்டதாக கூகிள் தண்டிக்கப்பட்டதுமுண்டு. கூகிளின் ஒளிப்பதிவுக் கருவிகளில் பல விநோதமான படங்களும் அகப்பட்டதுண்டு.

.
தெருவோரம் கிடக்கும் ஒரு உடல்

Airpot இல்லா விமானமிது Runwayஐத் தேடுது

காருக்குள் ஆடை மாற்றுதலா?
இந்த மின் பொறி நிச்சயம் தமிழ்நாட்டில் இல்லை

செல்வந்தர் வீடா?
சுவரில் நிறுத்திய வண்டி

சீனாவில் இப்படித்தான் கோலம் போடுவார்களோ?

சிறி சக்கரமா????

மண்ணில் தெரியும் ஒரு முகம்

ஈராக்கில் இரத்தக் களரி நடந்தது உண்மை. அதனால் இரத்த ஆறு ஓடியதா?

அந்தளவு பெரிய காற்றடைத்த முயல் பொம்மை.

கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்

ஹிட்லரின் swastica வடிவில் அடுக்கு மாடி வீடுகளைக் கட்டியது யார்?
வயலில் ஒரு முகம்

பறக்கும் தட்டு?????

கீரிமலைக் கடலில் குளித்தால் இந்தக் குதிரை முகம் மாறுமா?

கடலில் ஒரு விநோதமான உருவம்.
சில சமயம் உலகமகா அசிங்கங்களும் புகைப்படக் கருவிகளில் அகப்படுவதுண்டு...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...