Thursday 19 September 2013

சீனர்கள் ஏன் மகிழ்ச்சியாக இல்லை?

சீனாவின் பொருளாதாரம் உலகிலேயே இரண்டாவது பெரியது. சீனா ஒரு வேகமாக வளர்ந்து வரும் நாடு. சீன அரசு மக்களின் ந்லன்களுக்கான தனது செலவீனங்களை அதிகரித்துக் கொண்டே போகிறது. சீனாவின் மொத்த தேசிய உற்பத்தி 8.48ரில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால் சீனர்கள் மகிழ்ச்சியாக இல்லை என ஐக்கிய நாடுகளின் கணிப்புக் கூறுகிறது.

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட மகிழ்ச்சியுள்ள நாடுகளின் பட்டியலில் சீனா 93-வது இடத்தில் இருக்கின்றது. சீன மக்கள்  Romania, Kyrgyzstan, Pakistan, Libya, Indonesia, Vietnam, Albania, Angola, Turkmenistan, Kazakhstan, Malaysia, Venezuela, Mexico and Panama ஆகிய நாட்டு மக்களிலும் பார்க்க மகிழ்ச்சியின்றி இருப்பது பல சமூக பொருளாதார வல்லுனர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

156 நாடுகளைக் கொண்ட மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அமெரிக்கா 11வது இடத்திலும் பிரித்தானியா 18வது இடத்திலும் தாய்வான் 42வது இடத்திலும் ஜப்பான் 43வது இடத்திலும் பாக்கிஸ்த்தான் 81வது இடத்திலும், பங்களாதேஷ் 108வது இடத்திலும், இந்தியா 111வது இடத்திலும் இலங்கை 137வது இடத்திலும் இருக்கின்றன.

சீன அரசு ஊழல் நிறைந்தது.

சீனாவின் பொருளாதாரம் பெரிதாக இருந்தாலும் அதன் மக்கள் தொகை மிக அதிகமாக இருப்பதனால் அதன் தனிநபர் வருமானம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவானதே.

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பல நாடுகள் மக்கள் நலன் சேவைகளைச் செவ்வனவே செய்கின்றன. சீனாவின் மக்கள் நலன் சேவைகள் அபிவிருத்து அடைந்து கொண்டு சென்றாலும் இன்னும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறது.

சீனாவில் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையிலான உறவு மோசமானதாக இருக்கிறது. 

சீனாவில் படித்து நல்ல பதவியில் இருப்போர்க்கு மிக அதிக ஊதியமும் கீழ் நிலையில் உள்ள ஊழியர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமும் வழங்கப்படுகின்றது. வருமான சமபங்கீட்டு சுட்டெண் சீனாவில் மிக மோசமாக இருக்கிறது. 1980களுக்குப் பின்னர் பிறந்த பல சீனர்கள் பொருளாததரப் பிரச்சனை காரணமாக திருமணம் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர்.

சீன அரசு தனது முழுக்கவனத்தையும் தேசத்தின் மொத்த பொருளாதார உற்பத்தியை அதிகரிப்பதில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வருமானம் எப்படிப் பங்கிடப்படுகிறது என்பது பற்றியும் மக்களின் வாழ்வாதாரங்களைப்பற்றியும் அதிக கவனம் செலுத்தப்படவில்லை.இதனால் ஏழைகளின் ஏழைகளின் ஏழ்மை அதிகரித்துக் கொண்டே போகிது

ஆனாலும் சீன அரசுக்கு ஒரு மகிழ்ச்சியான் செய்தி இருக்கிறது. சீன மக்களோ அல்லது இளைஞர்களோ அரசுக்கு எதிர்ராக கிளர்ந்து எழும் சாத்தியம் இல்லை..

Wednesday 18 September 2013

சிரியக் குழு மோதல்கள் நல்ல திருப்பத்தைக் கொண்டு வருமா?

சிரியத் தேசிய சபை, சுதந்திர சிரியப்படை. ஜபத் அல் நஷ்ரா, இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு, மதசார்பற்ற மக்களாட்சிக்கான அமைப்பு, டமஸ்கஸ் பிரகடன அமைப்பு, சிரிய மக்களாட்சிக் கட்சி, சிரியப் புரட்சிக்கான உச்ச சபை, சிரிய உள்ளூர் ஒருங்கிணைப்புக் குழு,  மக்களாட்சி மாற்றத்திற்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழு, தேசிய மக்களாட்சி அணி, சிரியப்புரட்சிக்கான தேசிய ஆணையகம், சிரிய விடுதலைப்படை, சிரிய இசுலாமிய முன்னணி, சிரியத் தேசிய விடுதலை முன்னணி, விடுதலைக்கும் மாற்றத்துக்குமான முன்னணி...........இப்படி இனும் பல படைக்கலன் ஏந்திய குழுக்களும், மத அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராகச் செயற்படுகின்றன.

மேற்படி குழுக்கள் வேறு வேறு கட்டங்களில் வேறு வேறு குடை அமைப்புக்களாக இணைந்ததுண்டு.  பல குழுக்கள் 2011இன் இறுதிப்பகுதியில் சிரியத் தேசிய சபை என்னும் பெயரில் ஒன்றிணைந்தன. இந்தக் குடை அமைப்பை லிபியா அங்கீகரிந்த்தது. 2012 நவம்பரில் சிரியப் புரட்சிக்கும் எதிர்ப்புப் படைகளுக்குமான கூட்டமைப்பு (National Coalition for Syrian Revolutionary and Opposition Forces) என்னும் இன்னுமொரு குடை அமைப்பு உருவாக்கப்பட்டது.

அமெரிக்க ஆதரவு சுதந்திர சிரியப்படையில் 50,000பேரும், இசுலாமிய மதவாத அமைப்பான சிரிய விடுதலை முன்னணி என்னும் குடை அமைப்பில் 37,000 பேரும், சிரிய இசுலாமிய முன்னணியில் 13,000பேரும்  ஜபத் அல் நஸ்ரா அமைப்பில் 5,000 பேரும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஜபத் அல் நஸ்ரா அனுபவமும் தீரமும் மிக்க போராளிகளைக் கொண்டது. அத்துடன் அது நன்கு கட்டமைக்கப்பட்டு நன்கு நிர்வகிக்கப்படும் ஒரு அமைப்பாகும். அரச படைகளில் இருந்து விலகிய பலர் சுதந்திர சிரியப் படையில் இருக்கின்றனர். சிரிய சுதந்திரப்படையில் இருந்து ஆயிரத்திற்கு மேலானவர்கள் ஜபத் அல் நஸ்ரா அமைப்பில் இணைந்துள்ளனர்.சுததிர சிரியப் படை ஒரு நன்கு நிர்வகிக்கப்படும் அமைப்பல்ல. இதனால் இந்தக் குதிரையில் பணம் கட்ட அமெரிக்கா தயக்கம் காட்டி வந்தது.

ஆனால் இப்போது அல் கெய்தாவும் அதன் ஆதரவு அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து சிரியாவிற்கும் ஈராக்கிற்குமான இசுலாமிய அரசு (Islamic State of Iraq and Syria (ISIS)) என்னும் பெயரில் ஒரு குழுவை உருவாக்கியுள்ளன. இவை தற்போது சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் படைகளுக்கு எதிராகப் போராடும் அதே அளவு வலுவை தமக்கு ஒத்துவராத மேற்கு நாடுகளின் அமைப்பான சுதந்திர சிரியப்படைக்கும் அதன் ஆதரவு அமைப்புக்களுக்கும் எதிராக போராடச் செலவு செய்கின்றன. சிரியாவிற்கும் ஈராக்கிற்குமான இசுலாமிய அரசு செப்டம்பர் 12-ம் திகதியில் இருந்து அலேப்பே மாகாணத்தில் தமது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இது அலேப்பேயில் சிரியாவிற்கும் ஈராக்கிற்குமான இசுலாமிய அரசு எதிராக சிரிய சுததிரப்படையினர் ஒரு மக்கள் பேரணியை ஒழுங்கு செய்ததால் உருவானது. மக்கள் சொத்துக்களைக் கொள்ளை அடிக்கிறாரக்ள் என இரு குழுக்களும் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டுகின்றன. செப்டம்பர் 15-ம் திகதி ஈராக்-சிரிய எல்லையில் இருதரப்பினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றன. அதில் சிரிய விடுதலைப்படையினர் ஐவர் கொல்லப்பட்டனர்.  சிரியாவிற்கும் ஈராக்கிற்குமான இசுலாமிய அரசு தாம் தம்மை விமர்சிப்பவர்களைக் கொல்வதில்லை என்றும் போரில் அரச படைகளுடன் ஒத்துழைப்பவர்களையும் போரைச் சாட்டாக வைத்துக் கொண்டு இலாபமீட்டுவர்களையும் கொல்வதாகச் சொல்கிறது.

சிரியாவிற்கும் ஈராக்கிற்குமான இசுலாமிய அரசு தம்மிடம் அகப்படும் அரச படைகளை மிகக் கொடூரமாக சித்திரவதத செய்து கொல்வது பல தடவை காணொளிப்பதிவுகளாக வெளி வந்தன.  சிரியாவிற்கும் ஈராக்கிற்குமான இசுலாமிய அரசின் முக்கிய பங்காளியான ஜபரத் அல் நஸ்ரா இயக்கம் தமது கட்டுபாட்டில் உள்ள பிரதேசங்களில் இசுலாமிய சட்டங்களைக் கடுமையாக அமூல் படுத்துகிறது. இது பலரை ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஒரு சர்வாதிகாரியிடம் இருந்து விடுபட்டு இன்னொரு சர்வாதிகாரியிடம் அகப்பட நாம் தயாரில்லை எனச் சிலர் கூறியுள்ளனர். ஜபரத் அல் நஸ்ரா இயக்கத்தின் போரிடும் திறனை மக்கள் மதிக்கிறார்கள். சிரிய அரச படைகளுக்கு அவர்களே பெரும் இழப்புக்களை எற்படுத்தினர். அவர்களின் தற்கொடைத் தாக்குதல்கள் போர்முனையில் பல திருப்பங்களை ஏற்படுத்தின.

வேதியியல் குண்டு வீச்சுக்குப் பின்னர் மோதல் தீவிரம்
ஆகஸ்ட் 21-ம் திகதி சிரியாவில் வேதியியல் குண்டு விழுந்ததைத் தொடர்ந்து குழு மோதல் தீவிரமடைந்துள்ளது. ஆகஸ்ட் 21-ம் திகதிக்குப் பின்னர் அமெரிக்க ஆதரவு இயக்கமான சிரிய சுதந்திரப்படைக்கு அதிக அளவிலான படைக்கலன்கள் வெளியில் இருந்து கிடைத்துள்ளன. ஜூன் மாதத்தில் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்கள் வழங்கும் முடியவை அமெரிக்கா எடுத்திருந்தது ஆனால் அமெரிக்கா அனுப்பியவை காலணிகளும் சீருடைகளும் மட்டுமே. அல் கெய்தா ஆதரவுக் குழுக்களுக்கும் மற்ற தாராண்மைவாத அமைப்புக்களுக்கும் இடையிலான் மோதல் திவிரமடையும் பட்சத்தில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தாராண்மைவாத அமைப்புக்களுக்கு படைக்கலன்களை வழங்கி சிரியப் போரில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் அல்லது ஒரு மிக மோசமான இரத்தக் களரியை ஏற்படுத்தும் ஒரு மும்முனைப் போராக மாறலாம்.

Tuesday 17 September 2013

அமெரிக்காவிற்கு எதிராக இரசியாவின் அடுத்த இராசதந்திர அதிரடி நடவடிக்கை

சிரியாமீது மட்டுப்படுத்த தாக்குதல் என்று பெரிதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பெரிய "பில்ட் அப்" கொடுத்துக் கொண்டிருக்கும் போது இரசிய அதிபர் விளாடிமீர் புட்டீன் சிரிய வேதியியல் படைக்கலன்கள் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக தன் முன்மொழிவை முன்வைத்து ஒபாமாவைத் திணறடித்தார்.

எல்லா இராசதந்திர நடவடிக்கைகளும் சரிவராமல் போனதால் தான் மட்டுப்படுத்தப் பட்ட தாக்குதல் நடவடிக்கைக்கு அமெரிக்கப் பாராளமன்றமான காங்கிரசிடம் அனுமதி கேட்பதாகச் சொன்ன பராக் ஒபாமாவிற்கு இரசிய அதிபர் புட்டீனின் முன்மொழிவைக் கருத்தில் கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. அமெரிக்க அரசத் துறைச்செயலர் ஜோன் F கெரியும் இரசிய வெளிநாட்டமைச்சர் சேர்கி லவ்ரொவும் (Sergei Lavrov)  ஜெனிவாவில் சந்தித்து சிரிய வேதியியல் குண்டுகள் தொடர்பாக ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர். இதைத் தொடர்ந்து சிரியாமீதான தாக்குதலை ஒபாமா ஒத்தி வைத்தார்.  இந்த ஒத்தி வைப்பு சிரியாமீது தாக்குதல் நடாத்தி சிரிய உள்நாட்டுப் போரின் படைத்துறைச் சமநிலையை கிளர்ச்சிக்காரர்களுக்கு சாதகமாக்க நினைத்திருந்த ஒபாமாவிற்கு ஒரு இராசதந்திரத் தோல்வி எனப் பலதரப்புக்களில் இருந்து கருத்து வெளியிடப்பட்டது.

இரசிய அதிபர் புட்டீனின் அடுத்த அதிரடி நடவடிக்கையாக அவர் ஈரானிற்கு ஒரு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இதன் நோக்கம் ஈரானின் அணுக்குண்டு உற்பத்தி நடவடிக்கைகளை பாதுகாப்பதே. இரசிய அதிபரின் இந்த முடிவு இரசியாவும் சீனாவும் முக்கிய உறுப்பினர்களாக இருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்திலேயே எடுக்கப்பட்டது. ஈரானும் சிரியாவும் இரசியாவின் நெருங்கிய நட்புறவு நாடுகள் என்பதுடன் இரண்டும் இரசியாவில் இருந்து பெருமளவு படைக்கலங்களை இறக்குமதி செய்கின்றன. சிரியாமீது அமெரிக்கா தாக்குதல் நடாத்தி சிரியாவை கிளர்ச்சிக்காரர்கள் வசமாக்கினால் அமெரிக்காவின் அடுத்த இலக்கு ஈரானின் யூரேனியம் பதனிடும் நிலையங்கள் மீதாகத்தான் இருக்கும் என்று அஞ்சிக் கொண்டிருந்த ஈரானிற்கு சிரியாவில் அமேரிக்கத் தாக்குதலை நிறுத்தியதும் புட்டீன் ஈரானிற்குப் பயணம் மேற்கொள்வதும் பெரும் ஆறுதலாக அமைகிறது.

ஈரானிற்குப் பயணம் செய்யும் புட்டீன் இன்னும் ஒரு அணு உலையை அமைப்பதற்கு ஈரானிற்கு இரசியா உதவி செய்வது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரசியா, சீனா,கஜக்ஸ்தான், தஜிகிஸ்த்தான், உஸ்பெகிஸ்த்தான், கிர்கிஸ்த்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சிரியாவிற்கும் ஈரானிற்கும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன.

சிரியாமீது அமெரிக்கா தாக்குதல் நடாத்தினால் ஈரானுக்கு விமான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான எஸ்-300 எனப்படும் தரை-வான்  ஏவுகணை முறைமையை (surface-to-air missile system) விற்பனை செய்வேன் என இரசியா அமெரிக்காவை மிரட்டியும் இருந்தது. ஏற்கனவே இரசியா ஈரானிற்கு இந்த எஸ்-300 முறைமையை விற்பனை செய்ய உடன்படிக்கை கைச்சாத்திட்டிருந்தது. அமெரிக்கா, இஸ்ரேல், நாடுகள் சபை போன்றவற்றின் எதிர்ப்பால் அதை இரசியா கைவிட்டிருந்தது.

1991இல் சோவித் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மத்திய கிழக்கில் இரசியாவின் ஆதிக்கம் குறைந்து கொண்டு சென்றது. இரசியாவில் ஏற்பட்டிருந்த நிதி நெருக்கடி காரணமாக அங்கு படைத்துறைச் செலவுகள் குறைக்கப்பட்டன. படையினருக்கு ஊதியம் வழங்கவே பணம் இல்லாத நிலை இருந்தது. இரசியா தனது பல படைத்தளங்களைக் கைவிட்டது. படையினருக்கான பயிற்ச்சிகள் கூட ஒழுங்காக நடைபெறவில்லை. ஆனால் 2000இல் இரசிய அதிபரான விளாடிமீர் புட்டீன் இரசியப் படைத்துறைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டினார். இரசியாவின் எரிவாயு உற்பத்தி அதிகரிப்பும் உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பும் இரசியப் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவின. தற்போது இரசியாவின் பாதுகாப்புச் செலவு 90பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. சீனாவுடன் இணைந்தால் உலக ஆதிக்கத்தில் இரசியாவால் அமெரிக்காவிற்கு பெரும் சவாலாக மீண்டும் மாற முடியும்.

Monday 16 September 2013

இந்தியாவின் அக்னி - 5 ஏவுகணை சீனாவிற்கு சவாலாகுமா?

இந்தியா தனது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையான அக்னி - 5 ஐ வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவி பரிசோதித்துள்ளது. 5000கிலோ மீட்டர்கள் பாய்ந்து தாக்க கூடியதும் கண்டம் விட்டுக் கண்டம் பாயக் கூடிய இந்த ஏவுகணையால் சீனாவின் எப்பாகத்திலும் அணுக்குண்டுகளால் தாக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது.

இந்தியாவின் அக்னி - 5 ஏவுகணை 17மீட்டர் நீளமும் 50 தொன் எடையும் கொண்டது. இது ஒரு தொன் எடையுள்ள அணுக்குண்டை எடுத்துச் செல்லக்கூடியது. நகரக்கூடிய கனரக வண்டி ஒன்றில் இருந்து இதை ஏவலாம்.

அக்னி -  5 இந்தியப படைத்துறைத் தொழில்நுட்பத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியாகும். ஏற்கனவே இந்தியா கடலுக்கு அடியில் நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணை வீசும் தொழில்நுட்பத்தையும் பெற்றுள்ளது.

அக்னி - 5 இன் பாய்ச்சல் பாதையைப் பதிவு செய்தபார்த்த போது அது திட்டமிட்ட படி சரியாகச் செய்ற்பட்டது உறுதியாக்கப்பட்டுள்ளது.

சினாவிடம் தற்போது 250 அணு ஏவுகணைகளும், பாக்கிஸ்த்தானிடம் 120 அணு ஏவுகணைகளும் இந்தியாவிடம் 110 ஏவுகணைகளும் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சவால் இல்லை சமாளிப்புத்தான்
சீனாவின் DF-5A ஏவுகணைகள்13000 கிலோ மீட்டர் பாயக் கூடியவை, 3200கிலோ எடையுள்ள அணுக் குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடியவை. இந்தச் சாவாலை ஓரளவாவது சமாளிக்கும் திறனை இந்தியாவின் அக்னி - 5 இந்தியாவிற்கு வழங்கும். சீன ஊடகமான குளோபல் ரைம்ஸ் இந்தியா சீனாவின் எப்பாகத்திலும் அணுக் குண்டால் தாக்குதல் நடத்தும் திறனைப் பெற்றதை வைத்துக் கொண்டு தனது வலுவை உயர்த்தி மதிப்பிடக் கூடாது, சீனாவின் அணுக்குண்டால் தாக்கும் திறன் இந்தியாவினதிலும் பார்க்க மேன்மையானதும் நம்பகரமானதும் என்கிறது. சீனாவுடனான முரன்பாடுகளில் இந்தியா அக்னி - 5 வைத்துக் கொண்டு அடம் பிடிக்க முடியாது என்றும் சொல்கிறது சீனாவின் குளோபல் ரைம்ஸ்.

Sunday 15 September 2013

மீண்டும் ஒரு அல் கெய்தாத் தலைவரைக் கொன்றது அமெரிக்கா

அமெரிக்காவின் ஆளில்லாப் போர்விமானத் தாக்குதலில் அரபு குடநாட்டிற்கான அல் கெய்தாவின் (al-Qaeda in the Arabian Peninsula - (AQAP) முன்னணித் தலைவர்களில் ஒருவரான கயீத் அல் தஹாப் (Qaeed al-Dhahab) யேமனில் கொல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் இசுலாமிய சரியாமீதான போர் (U.S. “war on Islamic sharia”)
நடவடிக்கையின் ஒரு அம்சமாக கயீத் அல் தஹாப் கொல்லப்பட்டுள்ளார். யேமனின் தெற்குப் பகுதி மாகாணமான பெய்டாவில் உள்ள மனசே கிராமத்தில் மகிழூர்ந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கையில் கயீத் அல் தஹாப்பும் அவருடன் பயணித்துக் கொண்டிருந்த வேறு இருவரும் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு ஜூலை 28-ம் திகதிக்குப் பின்னர் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் 40இற்கு மேற்பட்ட தாக்குதல்களை யேமனின் தெற்கு, கிழக்கு தென் கிழக்குப் பிராந்தியங்களில் மேற்கொண்டு பலரைக் கொன்றுள்ளது.

கயீத் அல் தஹாப் அமெரிக்கா ஆக்கிமிப்பாளர்களுக்கு எதிராக ஈராக்கில் தீவிரமாகப் போராடிய் ஆயிரக்கணக்கான அல் கெய்தா போராளிகளில் முக்கியமானவர் ஆவர். அவர் பின்னர் யேமனில் செய்ற்பட்டுக் கொண்டிருதார்.

அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தற்போது உலகிலேயாஆபத்து மிக்க ஒரு அமைப்பாக அரபு குடநாட்டிற்கான அல் கெய்தா(AQAP) வைக் கருதுகிறது. கயீத் அல் தஹாப்பின் கொலையை அல் கெய்தாவும் ஒத்துக்கொண்டுள்ளது. 12-ம் திகதி வியாழக்கிழமை திருமணம் செய்து கொண்ட கயீத் அல் தஹாப் 14-ம் திகதி வியாழக்கிழமை கொல்லப்பட்டார்.

கயீத் அல் தஹாப் அமெரிக்காவில் பிறந்த இசுலாமிய மத போதகரும் தீவிர அல் கெய்தாச் செயற்பாட்டாளரும் அமெரிக்க ஆளில்லா விமானத்தாக்குதலில் கொல்லப்பட்டவருமான அன்வல் அல் அவலாக்கியின்( Anwar al-Awlaqi) திருமணமுறை மைத்துனருமாவார்(brother-in-law).

2011-ம் ஆண்டு யேமன் அதிபர் Ali Abdullah Salehஇற்கு எதிராக நிகழ்ந்த மக்கள் எழுச்சியை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திய அல் கெய்தா இயக்கத்தினர் யேமனின் தெற்குப் பிராந்தியத்தில் பெரும் நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இன்றுவரை பெரும் நிலப்பரப்பை அல் கெய்தா போராளிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...